India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவில் நகராட்சி மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்வதற்காக 296 கோடியே 8 லட்சம் செலவில் கிருஷ்ணன் கோயில் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றது. பணிகள் நிறைவுற்ற நிலையில் 12ஆம் தேதி முதல்வர் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் குடிநீர் திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இந்தப் பணிகள் பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையிலிருந்து இன்று உயர் அதிகாரிகள் வர உள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று(ஆக.05) அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற பழங்குடியின இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும் என பழங்குடியின நலத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் நவீன வசதிகளுடன் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.இந்த இலவச பயிற்சி வகுப்பு வரும் ஆக.10ஆம் தேதி முதல் 4 மாதங்களுக்கு சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் நடைபெறும்.
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ்-1 மாணவர்களுக்கு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 என இளநிலை பட்டப்படிப்பு வரை வழக்கப்படும். இதற்காக நேற்று குமரி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் 2,169 மாணவர்கள் தேர்வு எழுதினர். 207 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 7ம் தேதி வரை அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் & தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளன. இதையடுத்து குமரி ஆட்சியர் அழகு மீனா, “கடல் கொந்தளிப்புடன் காணப்படலாம். கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க செல்ல வேண்டாம்” என எச்சரித்துள்ளார்.
திருவட்டாறு நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜாக்சன் கொலை வழக்கில் நேற்று(ஆக.03) திற்பரப்பில் வைத்து சாரூர் வினீத்(26), மருங்கூரைச் சேர்ந்த மாரிமுத்து (30), விக்னேஷ்வரன்(18) மற்றும் 15 வயது சிறுவனையும் திருவட்டாறு இன்ஸ்பெக்டர் சீதாலெஷ்மி மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், முக்கிய குற்றவாளி ராஜகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று(ஆக.04) மாலை 5.30 மணி வரை 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மாலை 5.30 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் பரிசோதனைகள் செய்து மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. 30 வயதுக்கு மேலான பெண்கள் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் வாய் புற்றுநோய்க்கான ஆரம்ப கட்ட பரிசோதனை மேற்கொள்ளலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நேற்று குமரி மாவட்ட எஸ்.பி., சுந்தரவதனம் கூறியதாவது; குமரி மாவட்டத்தில் கொள்ளை சம்பவத்தை தடுக்கவும், கொள்ளையர்களை பிடிக்கவும் ஒவ்வொரு சப் டிவிஷனுக்கும் 4 தனிப்படைகள் என மொத்தம் 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரவுடிகள், பழைய குற்றவாளிகள் கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர். மது அருந்தி பைக்கில் சாகசம் செய்பவர்களை படம் எடுத்து 70103 63178 என்ற செல்போனுக்கு வாட்ஸ் அப் செய்யலாம் என்றார்.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
Sorry, no posts matched your criteria.