Kanyakumari

News August 7, 2024

குமரியில் கர்ப்பிணி சார்பதிவாளர் உட்பட 5 பேர் கைது

image

2023ல் தோவாளை சார்பதிவாளராக இருந்த மேகலிங்கம் விடுப்பில் சென்றிருந்த வேளையில் அப்பொறுப்பில் சுப்புலெட்சுமி(33) பணியாற்றினார். அப்போது, முறைகேடாக 20 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நேற்று குமரி க்ரைம் போலீசார் சுப்புலெட்சுமி, தனராஜா, நம்பிராஜன், ஜெயின் சைலா, டெல்பின் ஆகியோரை சிறையில் அடைத்தனர். சுப்புலெட்சுமி 6 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

News August 7, 2024

தனுஷ் பட பாடல் வரியுடன் ‘HELMET’ விழிப்புணர்வு

image

குமரி காவல்துறை சார்பில் ‘ராயன்’ பட பாடலை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள குமரி காவல்துறை, இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தும் வகையில் தனுஷ் நடித்த ‘ராயன்’ படத்தின் “உசுரே நீதானே நீ தானே..நிழலா உன் கூட நானே” என்ற பாடல் வரிகளுடன் மீம்ஸ் வெளியிட்டுள்ளது. இது இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

News August 7, 2024

வயது முதிர்ந்தோர் சமூகப் பொருளாதார நிலை குறித்த ஆய்வு

image

குமரி மாவட்டத்தில் 79 இடங்களில் வயது முதிர்ந்தோர் சமூகப் பொருளாதார நிலை குறித்த ஆய்வு தமிழக அரசால் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தேர்வு செய்யப்பட்ட 55 வயதுக்கு மேற்பட்டோர் உள்ள குடும்பங்களில், குமரி மாவட்ட பொருள் இயல், புள்ளி இயல் துறை பணியாளர்களால் ஆய்வு மேற்கொள்ளப்படும். சரியான விவரங்களை அளித்து ஒத்துழைப்பு அளிக்குமாறு ஆட்சியர் அழகு மீனா கேட்டுக்கொண்டுள்ளார்.

News August 6, 2024

உதயநிதியை சந்தித்த குமரி இளைஞரணியினர்

image

குமரி மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணியின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஜெகநாதன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள், சென்னையில் இன்று (ஆக 7) அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, இளைஞர் அணி சார்பில் குமரி மேற்கில் நடைபெற்ற பல்வேறு பணிகளை அவருடன் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, “நலத்திட்ட பணிகளை மக்களிடம் சேர்க்க இளைஞரணியினர் உழைக்க வேண்டும் என” உதயநிதி தெரிவித்தார்.

News August 6, 2024

வாவுபலி பொருட்காட்சியில் போலி பாஸ்

image

குழித்துறையில் நடக்கும் வாவுபலி பொருட்காட்சி திடலில் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று செல்ல வேண்டும். இதில் விஐபி-கள், அரசு அதிகாரிகளுக்கு இலவச பாஸ் ஒப்பந்ததாரர் மூலம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில், ஒரு கும்பல் விஐபி பாஸ் போன்று போலி அட்டை தயாரித்து ரூ.200-க்கு மக்களுக்கு விற்பனை செய்துள்ளது. இது குறித்து ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 6, 2024

நாகர்கோவிலில் பத்திரப்பதிவில் முறைகேடு : 5 பேர் அதிரடி கைது

image

நாகர்கோவில் அருகே முறைகேடாக பத்திரப்பதிவு செய்யததாக சார் பதிவாளர் உட்பட பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தோவாளை சார் பதிவாளரின் பெயரில் உள்ள லாக் இன் ஐடி மூலம் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து, சார்பதிவாளர் சுப்புலட்சுமி, அலுவலக உதவியாளர்கள் தனராஜ், நம்பிராஜ், ஒப்பந்த பணியாளர்கள் டெப்லின், ஜெயின் ஷைலா ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

News August 6, 2024

அம்மன் நகையை திருடி தவறை உணர்ந்த திருடன்?

image

ஆரல்வாய்மொழி அருகே உள்ள அம்மன் கோயிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அம்மனின் 2 கிராம் தங்கப் பொட்டு திருட்டுபோனது. இந்த நிலையில் நேற்று(ஆக.,5) காலையில் கோயிலின் கருவறை முன்பு தாமரை பூவுடன் அம்மனின் நகை(தங்க பொட்டு) இருந்தது. இதையடுத்து அம்மனின் நகையை திருடி தூக்கமின்றி இருந்து, தவறை உணர்ந்து மீண்டும் கோயிலிலேயே நகையை வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என அப்பகுதியினர் பேசி வருகின்றனர். SHARE IT.

News August 6, 2024

சிகிச்சை பெற்று வருபவருக்கு ஆறுதல் கூறிய மேயர்

image

கன்னியாகுமரி திமுக கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஆனந்தின் மகன் விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் மருத்துவமனை சென்று அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். மண்டல தலைவர் ஜவகர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் உட்பட பலர் உடனிருந்தனர்.

News August 6, 2024

குமரியில் 288 போலீசார் இடமாற்றம்: எஸ்பி உத்தரவு

image

குமரி மாவட்டத்தில் 4 துணை போலீஸ் சரகங்களில் 33 போலீஸ் நிலையங்கள் உள்ளன. 3 ஆண்டுகள் ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் என மொத்தம் 288 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் நேற்று(ஆக.,5) பிறப்பித்தார்.

News August 5, 2024

அரசு ஐ.டி.ஐ.யில் விண்ணப்பிக்க ஆக.16 கடைசி நாள்

image

நாகர்கோவில் கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பயிற்சி பயில விரும்புவோர் ஆக.16 வரை விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை. பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. காலணி, சீருடை இலவசம். கட்டணமின்றி பயிற்சி. உதவித்தொகை மாதம் ரூ.750 வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 9499055805, 04652-260463, 261463 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் என குமரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!