Kanyakumari

News August 8, 2024

நாகர்கோவில் சிறையில் சவுக்கு சங்கர்

image

பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்தது குறித்து, களியக்காவிளை ஆய்வாளர் சுப்புலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கில் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக புழல் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று(ஆக.,7) அதிகாலை 2.30 மணி அளவில் நாகர்கோவில் சிறைக்கு கொண்டுவரப்பட்டார்.

News August 8, 2024

குமரி மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் துவக்கம்

image

குமரி மாவட்டத்தில் முதல் பருவ கன்னிப்பூ சாகுபடி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போதைய நிலையில் நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் பறக்கை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் நேற்று (ஆக.07) தொடங்கியுள்ளது. கடந்த பருவத்தின் போது கிடைத்த அளவிற்கு நெல் மகசூல் நோய் காரணமாக இந்த பருவத்தில் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

News August 8, 2024

குமரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

image

தாம்பரம் ரயில் நிலைய பாதையில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இம்மாதம் 16 , 17 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி ரயில் எழும்பூருக்கு பதில் செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும். அதேபோன்று 15, 16 தேதிகளில் கன்னியாகுமரி ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 7, 2024

குமரி புதிய இன்ஸ்பெக்டர் அதிரடி அறிவிப்பு

image

கன்னியாகுமரியில் புதிய போலீஸ்  இன்ஸ்பெக்டராக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (ஆக. 6) கன்னியாகுமரியில் பதவி ஏற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது, ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் கன்னியாகுமரியில் கஞ்சா உட்பட போதைபொருட்கள் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேரங்களில் போலீசார் ரோந்தில் ஈடுபடுவர். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

News August 7, 2024

தமிழ்ப் புதல்வன் திட்டம் குறித்து ஆலோசனை 

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் இன்று முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படவுள்ள தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். இத்திட்டத்தில் 6261 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், 9ம் தேதி முதல் 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

News August 7, 2024

குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் பொறுப்பேற்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் இணை ஆணையராக பணியாற்றி வந்த பழனிக்குமார் குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாக இணை ஆணையாளராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று (ஆக.07) அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இருந்தனர்.

News August 7, 2024

குமரி கடலில் இறங்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

image

கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர். இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை   வந்தனர். சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட்ட அனுமதி அளித்த போதிலும் கடலில் இறங்குவதற்கு போலீசார் தடை விதித்தனர். அலை சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். 

News August 7, 2024

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குக: விஜய் வசந்த் MP

image

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை குமரி எம்.பி. விஜய் வசந்த் நேற்று நேரில் சந்தித்து அளித்த மனு அளித்தார். அதில், மாணவர்களுக்கு வட்டியில்லா கல்வி கடன் மற்றும் விவசாயிகள், மீனவர்கள், நடுத்தர மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர பல அத்தியாவசிய பொருட்களின் வரியினை குறைக்க வேண்டும். சிறு குறு மையை குறைக்க GST சேவையை எளிமையாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

News August 7, 2024

வினேஷ் போகத்துக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

image

அமைச்சர் மனோதங்கராஜ் முகநூலில் குறிப்பிட்டிருப்பதாவது, ஆதிக்கம் நிறைந்த இவ்வுலகில் பாலின ஒடுக்குமுறையை தைரியத்துடன் எதிர்கொண்டு அதே துறையில் தனது ஒடுக்குமுறை விலங்கை உடைத்து கழுத்தில் மகுடமாய் சூட காத்திருக்கும் வீரமங்கை வினேஷ் போகத்! அன்று உன் போராட்டத்திற்காக உனது கையை கட்டியவர்கள் இன்று கைதட்டுகிறார்கள்! பெண் சமுதாயத்திற்கு ஓர் உதாரணமாக திகழ்கிறாய். வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

News August 7, 2024

குமரி கடற்கரை பகுதியில் எச்சரிக்கை

image

தென் தமிழக கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் குமரி மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!