Kanyakumari

News August 9, 2024

பகவதி அம்மன் கோவிலில் புத்தரிசி பூஜை

image

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை 12-ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலையில் வயல்களிலிருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்து, கட்டுகளாக குமரி சாஸ்தா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். பின்னர் நெற்பயிர் கட்டுகளை கோவில் மேல்சாந்தி தலையில் சுமந்து அம்மனுன் முன் படைத்து பூஜை செய்வர். அடுத்து நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

News August 8, 2024

மகள் சாவு குறித்து விசாரணை நடத்த தந்தை எஸ்.பி-யிடம் மனு

image

திசையன்விளையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (68) இவர் இன்று (8ம் தேதி) நாகர்கோவிலில் மாவட்ட எஸ்பி ஆபீசில் புகாரளித்தார். அதில், “எனது 2 வது மகள் நீலவேணி பல் மருத்துவமனை நடத்தி வந்த நிலையில் கடந்த 7 மாதத்திற்கு முன்பு காணாமல் போய்விட்டார். இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் இன்று இறந்துள்ளார். அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

News August 8, 2024

சவுக்கு சங்கர் நாளை சென்னை கொண்டு செல்லப்படுகிறார்

image

பெண் காவலர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் பதிவு செய்த வழக்கில் குழித்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்ட சவுக்கு சங்கர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் நாகர்கோவில் சிறைக்கு கொண்டுவரப்பட்டார். இன்று இரவு நாகர்கோவில் சிறையில் இருக்கும் அவர் நாளை சென்னை அழைத்துச் செல்லப்படுகிறார்.

News August 8, 2024

நாளை குமரி வரும் அயலக தமிழர்கள்

image

பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா, தலைமையில், நாகர்கோயில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர், நாளை காலை 9 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் அயலகத் தமிழர் மாணவர்களை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து வளாகத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடுகிறார்கள். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் கப்பல் மூலம் திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிக்க செல்கின்றனர்.

News August 8, 2024

குமரியில் நாளை தொடக்கம்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தினை கோவையில் நாளை (ஆக.9) தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆட்சியர் அழகுமீனா தலைமையில், மேயர் மகேஷ் முன்னிலையில், நாளை காலை 11 மணிக்கு கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் குமரியில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

News August 8, 2024

குமரி ஆட்சியர் அழகுமீனா அகதிகள் முகாமில் ஆய்வு

image

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெருமாள் புரத்தில் அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் உள்ளனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று பெருமாள்புரம் அகதிகள் முகாமுக்கு சென்று ஆய்வு செய்தார். முகாமில் ரூ.6 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் பணிகளையும் அவர் ஆய்வு செய்து, அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

News August 8, 2024

பூம்புகார் கப்பல் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்

image

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு சேவையானது கடலின் நீர்மட்டம் தாழ்வு காரணமாக தற்காலிகமாக படகு சேவை இன்று (ஆக.09) காலை முதல் ரத்து செய்யப்படுவதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

News August 8, 2024

நாகர்கோவில் to வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

image

வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு வேளாங்கண்ணி பேராலய திருவிழாவிற்காக, நாகர்கோவிலில் இருந்து ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் இன்று(ஆக.,8) தெரிவித்துள்ளனர்

News August 8, 2024

KUMARI: கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

image

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக, கடலுக்கு செல்ல வேண்டாம் என கலெக்டர் அழகு மீனா இன்று(ஆக.,8) எச்சரிக்கை விடுத்துள்ளார். பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் கடல் பகுதிகளில் கவனமுடன் இருக்கும்படி ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்து.

News August 8, 2024

குமரி மாணவர்களே! ரூ.6 ஆயிரம் உதவித்தொகை

image

இந்திய அஞ்சல் துறை சார்பாக குமரி மாவட்டத்தில் மாணவர்களிடையே தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் விதமாக, 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு 2 கட்டமாக எழுத்து, வினாடிவினா தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் மாணவருக்கு ரூ.6 உதவித்தொகையாக வழங்கபட உள்ளது. இவ்வாறு நேற்று(ஆக.,7) குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE IT.

error: Content is protected !!