India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்தவர் சாதுசுந்தர் (49). இவர் சம்பவத்தன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையை கொஞ்சுவது போல் நடித்து, மிட்டாய் வாங்கி தருவதாக கடைக்கு தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து குழந்தையின் தாயார் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் வரும் 12ஆம் தேதி அன்று போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை அனைத்து மாணவர்கள் மற்றும் இளம் சமுதாயத்தினர் பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே குமரி மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சியின் சாதாரண கூட்டம் வரும் 20.08.2024 அன்று முற்பகல் 11.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில், முக்கிய திட்டங்கள் குறித்து விவாதித்து ஆய்வு செய்யப்படவுள்ளது என மாவட்ட திட்டக்குழு தலைவர் மெர்லியன்ட் தாஸ் அறிவித்துள்ளார்.
இ.எஸ்.ஐ. பயனாளிகளுக்கான சம்பள வரம்பு ரூபாய் 15000, 2016ஆம் ஆண்டு ரூ.21000 என மாற்றி அமைக்கப்பட்டது. மாத ஊதியமாக ரூ.21000 பெறும் ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ. சேவை வழங்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார சூழல், விலைவாசியை கணக்கில் கொண்டு ஊதிய வரம்பை ரூ.30 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை சந்தித்து குமரி எம்.பி. விஜய்வசந்த் கோரிக்கை மனு அளித்தார்.
சென்னை – நாகர்கோவில் வழித்தடத்தில் இயக்கப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை தொடர்ந்து சென்னை – நாகர்கோவில் வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வேத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்த ரயில் இயக்கப்படுவதாக அறிவித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் ரயில் இயக்கப்படாமல் இருப்பதால் காலதாமதம் இன்றி உடனே ரயிலை இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தோவாளை தூவச்சி பகுதியில் கடந்த ஆண்டு கால்வாய் உடைந்ததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதற்குரிய நிவாரணம் வேண்டும் என தோவாளை விவசாயி ஞான சேசு மதுரை ஐகோர்டில் மனு தாக்கல் செய்தார். நேற்று நடைபெற்ற விசாரணையில், வழக்கு குறித்து வேளாண் துறை செயலாளர், நீர்வளத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதம் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
குமரி மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் கூறியதாவது; நுகர்வோர் தங்களது வீடுகள், வணிக பயன்பாடு உட்பட அனைத்து வகையான புதிய மின் இணைப்புகளுக்கு www.tangedco.org என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டண விவரங்கள் இணையதளத்தில் தரப்பட்டுள்ளது. விவரத்திற்கு 9445854489, 4514, 4531, 4477 என்ற எண்களில் அழைத்து அறிந்து கொள்ளலாம் என்றார்.
குமரி மாவட்டத்தில் பொது வினியோகத்திட்ட செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்காக அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சிறப்பு மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் இன்று (ஆக.10) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.இந்த முகாமில் ரேஷன் அட்டையில் உள்ள குறைகளை தீர்க்க பொதுமக்கள் மனு அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று காலை 11 மணி அளவில் குமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று (ஆக.10) தெரிவித்துள்ளார். ஊராட்சி வளர்ச்சித் திட்டம், வறுமை ஒழிப்புத் திட்டம், அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
குமரி கென்னல் கிளப் சார்பில் அகில இந்திய அளவில் அனைத்து வகை நாய் கண்காட்சி & சேம்பியன்ஷிப் போட்டி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. சேம்பியன்ஷிப் போட்டிகளுக்கு செர்பியாவை சேர்ந்த நெனாட் டேவிடோவிக், நடாசா டேவிடோவிக் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை குமரி மாவட்ட கென்னல் கிளப் செய்து வருகிறது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.