Kanyakumari

News August 12, 2024

தேங்காய்பட்டினத்தில் படகு கடத்தியவர் இலங்கையில் கைது

image

குமரி தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் சின்னத்துறையை சேர்ந்த கார்லோசுக்கு சொந்தமான படகு திருட்டுப் போனது. இது தொடர்பான விசாரணையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கேரளா திருச்சூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தப்பிய இலங்கையை சேர்ந்த அஜய் கிருஷ்ணா படகை திருடியது தெரியவந்தது. இந்நிலையில் அவர் இலங்கையில் கைது செய்யப்பட்டு படகு மீட்கப்பட்டதாக குமரி போலீசாருக்கு நேற்று(ஆக.,11) தகவல் வந்தது.

News August 11, 2024

குமரியில் கோவில்களில் நாளை நிறை புத்தரிசி பூஜை

image

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், வெள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவில் ஆகிய 6 பிரசித்தி பெற்ற கோவில்களில் நாளை நிறை புத்தரிசி பூஜை நடக்கிறது. காலை 5.30 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் நிறை புத்தரிசி பூஜை நடக்கிறது.

News August 11, 2024

குமரி மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழக்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. *உங்கள் பகுதி மழை நிலவரங்களை கமெண்டில் சொல்லவும்*

News August 11, 2024

விளவங்கோடு அருகே 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்

image

விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதாகுமாரி குழுவினர் இரவிபுதூர்கடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நிறுத்தாமல் சென்ற டெம்போவை துரத்தி சாமியார்மடம் அருகே மடக்கி பிடித்தனர். டிரைவர் டெம்போவை விட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, நடத்திய சோதனையில் டெம்போவில் 3000 கிலோ ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அரிசு மற்றம் டெம்போவை பறிமுதல் செய்தனர்.

News August 11, 2024

நாகர்கோவில் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

image

கூட்ட நெரிசலை தவிர்க்க நாகர்கோவிலில் இருந்து இம்மாதம் 18 & 25 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கும், மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து ஆக.,19 & 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் நேற்று(ஆக.,10) இரவு தெரிவித்தனர். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

News August 11, 2024

நாகர்கோவிலில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்

image

நாகர்கோவில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.296 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தினசரி மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை(ஆக.,12) சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். நாகர்கோவில் நடைபெறும் விழாவில் ஆட்சியர், மேயர் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

News August 11, 2024

குமரி அருகே பாடம் மறந்ததால் +1 மாணவி தற்கொலை

image

குமரி பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் 11 ஆம் வகுப்பு மாணவி. இவர் நன்றாக படித்தும் தேர்வின்போது பாடங்கள் மறந்து சரியாக தேர்வு எழுத முடியவில்லை என வருத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம்(ஆக.,9) உடல்நிலை சரியில்லை என்று கூறி பள்ளிக்கு செல்லாத இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News August 11, 2024

அவைத் தலைவருக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்

image

குமரி இராஜாக்கமங்கலம் ஒன்றிய அதிமுக அவைத் தலைவர் முருகன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். இதை அறிந்து, நேற்று(ஆக.,10) தெக்குறிச்சி அம்பேத்கர் நகரிலுள்ள அவரது இல்லத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான பச்சைமால், முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் & முன்னாள் மா.செ. அசோகன் உட்பட ஏராளமானோர் முருகன் உடல்நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.

News August 11, 2024

நாகர்கோவில் எம்.எல்.ஏ பரபரப்பு அறிக்கை

image

“பேச்சிப்பாறை அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கடலில் கலக்கிறது. ஆனால் அனந்தனாறு, காரவிளை, சம்பக்குளம் முதலிய சானலில் கடைவரம்பு நிலம் வரை தண்ணீர் முழுமையாக செல்லவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கின்றனர். உடனே தண்ணீர் விடவேண்டும் இல்லையேல் வரும், 16 ஆம் தேதி பா.ஜ.கட்சி, பொதுமக்கள் பங்கேற்கும் ஆர்பாட்டம் நடக்கும்” என நாகர்கோவில் எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.

News August 10, 2024

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க பா.ஜ.க நிர்வாகி வேண்டுகோள்

image

குமரி மாவட்டம் தோவாளை கால்வாயை நம்பி விவசாயம் நடந்துவந்த 6 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. “இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் வழியாக ஆட்சியர் ஆய்வுசெய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என பா.ஜ.க சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் சதிஷ்ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!