Kanyakumari

News August 13, 2024

குமரி பிற்படுத்தப்பட்டோர் கவனத்திற்கு

image

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி, மேற்கண்ட இன மக்களை 10 நபர்கள் கொண்ட குழுவாக அமைத்து, ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு அரசு ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.

News August 13, 2024

நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

image

சுதந்திர தின விடுமுறையையொட்டி தென்மாவட்டத்திற்கு சிறப்பு ரயில் இயக்ககப்படுகிறது. ஆக.14 அன்று இரவு 11:30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு அதி விரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது ஆக.15 மதியம் 12.30 க்கு நாகர்கோவில் சென்றடையும். பின்னர் அக.15 அன்று இரவு 11:30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு ஆக.16 காலை 5.10 மணிக்கு ஆவடி வந்தடையும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

News August 13, 2024

குமரி ஜீரோ பாய்ண்டில் தேசியக்கொடி

image

குமரியில் ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள 148 அடி உயர கம்பம் முறையாக பாராமரிக்கப்பட வில்லை என தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் பாரமரிப்பு பணி முடிந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டுவுட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் தேசியக்கொடியை எவ்வித களக்கமும் இல்லாமல் பராமரிப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News August 13, 2024

95 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

image

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர்கள் செய்து வருகிறார்கள். பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

News August 13, 2024

குமரியில் கிலோ ரூ.250ஐ நெருங்கும் ரப்பர் விலை

image

குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் ரப்பர் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ரப்பர் விலை மீண்டும் உயரத்தொடங்கி இருந்த நிலையில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் ரப்பர் விலை மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. கோட்டயம் மார்க்கெட்டில் ஆர்.எஸ்.எஸ் – 4 கிரேடு ரப்பர் விலை நேற்று(ஆக.,12) கிலோ ரூ.247 ஆக இருந்தது. ஆனால் சிறு வியாபாரிகள் இதனை விட அதிக விலை கொடுத்து ரப்பர் வாங்கத் தொடங்கியுள்ளனர்.

News August 13, 2024

குமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(ஆக.,13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று கனமழை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் குடை எடுத்துச் செல்லவும். தெரிஞ்சங்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 12, 2024

ரயில்வே பொது மேலாளரை சந்தித்த குமரி எம்.பி!

image

தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் சிங்கை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று (ஆக-12) சென்னையில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது, “இரணியல் ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகம் அமைக்க திட்டமிட்டிருக்கும் ஜல்லி கிடங்கு, நடைமேடையின் அருகே அமைய இருப்பதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அதை மாற்றி அமைக்க வேண்டும்” என கேட்டு கொண்டார்.

News August 12, 2024

குமரிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

image

சுதந்திரத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 14/08/2024 அன்று கிளாம்பாக்கத்திலிருந்து குமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு 470 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும், ஆக.,16, 17 தேதிகளில் 365 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. * சென்னையில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்*.

News August 12, 2024

மின்னொளியில் ஜொலிக்கும் சுத்திகரிப்பு நிலையம்

image

முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக ரூ.296.08 கோடி மதிப்பிலான குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார். இதையொட்டி சுத்திகரிப்பு நிலையம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிகப்பட்டுள்ளது. மின்னொளியில் ஜொலிக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை காணலாம்.

News August 12, 2024

பசுமை தொழில் நிறுவனங்களுக்கு கடன் – ஆட்சியர் தகவல்

image

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் நடத்தப்படும் பசுமை தொழில் நிறுவனங்களுக்கு ரூ.4 லட்சம் 3 கட்டங்களாக தொழில் வளர்ச்சி நிதியாக வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள பசுமை தொழில் நிறுவனங்கள் கன்னியாகுமரி மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம், மேலாண்மை அலகு, இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 20.ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழகு மீனா கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!