Kanyakumari

News September 5, 2024

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குமரியில் பூ விலை அதிகரிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மல்லிகை பூ விலை கிலோ ரூ.800யாக உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மல்லிகை பூ விலை உயர்ந்துள்ளது. நேற்று மாவட்டத்தில் மல்லிகை பூ விலை  ரூ600 இருந்த நிலையில் இன்று ரூ200  அதிகரித்து ரூ800யாக உள்ளது. இதைப் போன்று பிச்சி செவ்வந்தி உள்ளிட்ட இதர பூக்களின் விலையும் சற்று அதிகரித்துள்ளது.

News September 5, 2024

ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்கள் போராட்டம்

image

மாணவரும் ஆசிரியர்களும் மன அழுத்தம் இல்லாத சுதந்திரமான முறையில் கற்றல் கற்பித்தல் பணியை செய்ய விட வேண்டும். கற்றல் கற்பித்தல் நேரத்தை முறைப்படுத்த வேண்டும், கிடப்பில் உள்ள கோப்புகள் மீது காலம் தாழ்த்தாமல் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆசிரியர் தினமான இன்று கோரிக்கை அட்டை அணிந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News September 5, 2024

குமரி கடலில் படகு போக்குவரத்து 3 மணி நேரம் தாமதம்

image

கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அதன் அருகில் திருவள்ளுவர்
சிலையையும் பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக 3படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை தொடர்ந்து படகு போக்குவரத்து நடைபெறுவது வழக்கம். இன்று (செப்.5) நீர்மட்டம் தாழ்வால் 11மணிக்கு தொடங்கியது.

News September 5, 2024

நாகர்கோவிலில் கழிவறை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா

image

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் புதிதாக கழிவறை கட்டும் பணியினை மேயர் மகேஷ் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் இன்று காலை அடிக்கல் நாட்டும் விழாவை துவக்கி வைத்தனர். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் துணை மேயர் மேரி பிரின்ஸிலதா, மண்டலத்தலைவர் ஜவஹர், தொழில்நுட்ப அலுவலர் பாஸ்கர்,
சுகாதார அலுவலர் ராஜாராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News September 5, 2024

குமரியில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

image

கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு போதைப் பொருள்நுண்ணறிவு பிரிவு போலீசார் சார்பில் புற்றுநோய் தடுப்புவிழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின்சுஜாதா தொடங்கவைத்தார் .
இந்த நிகழ்ச்சிக்குகார்த்திக்அய்யப்பன் தலைமை தாங்கினார். இதில் பசுமை இயக்க சமூகசேவகர் டாக்டர்நாகேந்திரன் மற்றும் மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்

News September 5, 2024

கண் லென்ஸ் பொருத்தும் முகாம் செப். 9ல் ஆரம்பம் – ஆட்சியர்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் ”கண் லென்ஸ் பொருத்தும் முகாம் நடைபெறும் இடங்களை ஆட்சியர் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அவை தோவாளை ஊராட்சி ஒன்றியம் 9ம்தேதி, மேல்புறத்தில் 12ம் தேதி, குருந்தன் கோட்டில் 18ம் தேதி,  முன்சிறையில் 20ம் தேதி, கிள்ளியூரில் 23ம் தேதி, ராஜாக்கமங்கலத்தில் 25ம் தேதி, தக்கலையில் 26ம் தேதி, திருவட்டாரில் 27ம் தேதி, மற்றும் அகஸ்தீஸ்வரத்தில் 28 தேதிகளிலும் நடக்கிறது. 

News September 5, 2024

குமரியில் 5 BDO-க்கள் இடமாற்றம் – ஆட்சியர் அதிரடி

image

நிர்வாக நலன் கருதி கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பிடிஓ பத்மரதி அகஸ்தீஸ்வரத்திற்கும், அகஸ்தீஸ்வரம் பிடிஓ ஜெயா தோவாளைக்கும், தோவாளை பிடிஓ சுரேஷ்குமார் மேல்புறத்துக்கும், ராஜாக்கமங்கலம் பிடிஓ சாந்தி தக்கலைக்கும், திருவட்டார் துணை பிடிஓ அஜிதா ராஜாக்கமங்கலத்திற்கு பிடிஒவாகவும்  மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி மாறுதல் உத்தரவை குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று பிறப்பித்தார்.

 

News September 5, 2024

கீரிப்பாறை – காரி மணி சாலை சீரமைக்க அமைச்சரிடம் மனு

image

குமரி தோவாளை ஊராட்சி ஒன்றியம் பாலமோர் ஊராட்சிக்கு உட்பட்ட கீரிப்பாறை – காரி மணிசாலையை செப்பனிட கோரி பலமுறை மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று, ஊராட்சி மன்ற தலைவி லில்லிபாய் சாந்தப்பன் இன்று அமைச்சர் எ.வ.வேலுவிடம் மனு அளித்தார். மேலும், வசிக்கும் மக்கள் மருத்துவ வசதிக்கும் ஆட்டோ, கார்களில் செல்லும் அவசியம் உள்ளதாக தெரிவித்தார்.

News September 4, 2024

விளை நிலங்களில் யானைகள் புகுவதை விரட்ட நடவடிக்கை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைநிலங்களில் யானைகள் புகுந்து விவசாய பயிர்களை அழித்து நாசம் செய்து வருகிறது. இதை தடுக்க வன காவலர்கள் கொண்ட தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு யானைகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருவதாக வன சரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யானைகள் எந்த வழியாக வருகிறது என்பது குறித்து அறிந்து அவர்களை விரட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

News September 4, 2024

திருவள்ளுவர் சிலை பாலப்பணி – அமைச்சர் ஆய்வு

image

கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் அதன் அருகில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் இணைக்கும் கண்ணாடி இழையினால் ஆன கூண்டு இணைப்பு பாலத்தினை ரூ.37 கோடி செலவில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை அமைச்சர்கள் எ.வ.வேலு, த.மனோ தங்கராஜ் படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

error: Content is protected !!