Kanyakumari

News October 28, 2024

எடப்பாடியிடம் வாழ்த்து பெற்ற குமரி முன்னாள் அமைச்சர்

image

சென்னையில் இன்று, முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை குமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் வடசென்னை பூத் கமிட்டி பார்வையாளரும் அ.தி.மு.க அமைப்பு செயலாளருமான கே டி பச்சைமால் நேரில் சந்தித்தார். அப்போது, தீபாவளியன்று தனது பிறந்தநாள் வரஇருப்பதை முன்னிட்டு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

News October 28, 2024

குமரி நிர்வாகத்தை பாராட்டிய அமைச்சர் தங்கம் தென்னரசு

image

குமரி மாவட்டத்தில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அண்மையில் பெய்த மழையில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தேன். இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு நிவாரணங்கள் வழங்கவும் மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றார்.

News October 28, 2024

நாகர்கோவில்: தப்பி ஓடிய கைதியை பிடிக்க 2 தனிப்படை!

image

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கொலை கைதி சதீஷ் மருத்துவமனையில் இருந்து நேற்று அதிகாலை தப்பி ஓடினார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவரை கண்டுபிடிப்பதற்காக 2 தனி படைகளை மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் அமைத்துள்ளார். அவர்கள் தப்பி ஓடிய கைதியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News October 28, 2024

குமரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம்

image

குமரி மாவட்டத்தில் நேற்று(அக்.,27) பெய்த மழை அளவு விவரம்: மயிலாடியில் 72.2 மி.மீ., கொட்டாரம்-29.6, நாகர்கோவில்-55, கன்னிமார்-6.8, ஆரல்வாய்மொழி-8.2, பூதப்பாண்டி-20.2, தக்கலை-64.6, குளச்சல்-32, இரணியல்-6.4, ஆனைகிடங்கு-33.8, , திற்பரப்பு-11, முள்ளங்கினாவிளை-28, பேச்சிப் பாறை-38.8, பெருஞ்சாணி-16.6, சிற்றார் I-27.2, சிற்றார் II-4, முக்கடல் 8 மி.மீ என்ற அளவில் மழை பெய்திருந்தது.

News October 28, 2024

குமரி மாவட்டத்தில் இன்றைய நிகழ்வுகள்!

image

➤இன்று(அக்.,28) காலை 9 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிடுகிறார். ➤காலை 10 மணிக்கு கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தவர்களுக்கு தற்போது அரிசி வழங்காததை கண்டித்து அடைக்கா குழி சந்திப்பில் CPIM ஆர்ப்பாட்டம். ➤காலை 10 மணிக்கு தலித்துகளுக்கு சட்டமன்றத் தொகுதி ஒதுக்க கேட்டு விசிகவினர் இறச்சகுளத்தில் உண்ணாவிரம்.

News October 28, 2024

நாளை முதல் ரப்பர் வெட்டும் தொழில் நடக்குமா?

image

இன்று காலையில் இருந்து மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யவில்லை. மதியத்துக்கு மேல் சுள்ளென வெயில் அடித்தது. தொடர் மழையால் ஈரப்பதத்துடன் காணப்பட்ட ரப்பர் மரங்கள் இன்றைய வெயிலில் பால் வெட்டும் நிலையில் காணப்பட்டன. இன்று இரவு, நாளை காலை மழை இல்லாமல் இருந்தால் மட்டுமே பால் வெட்டும் தொழில் நடக்கும் என விவசாயிகள் கூறினர்.

News October 28, 2024

8 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டு பலாத்கார வழக்கு, கொலை முயற்சி வழக்கு மற்றும் அடிதடி வழக்கில் 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி விஜு ராஜ் (42) என்பவர் நித்திரவிளை போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை கைது செய்த போலீஸ் அதிகாரிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டினார்.

News October 27, 2024

குமரி வருகிறார் பொறுப்பு அமைச்சர்

image

தமிழக நிதி அமைச்சர் மற்றும் கால நலத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை காலை 9 மணிக்கு சுசீந்திரம் பழையாற்றில் புதர்கள் அகற்றும் பணிகளை பார்வையிடுகிறார். இதைதொடர்ந்து, 9:15 மணிக்கு பறைக்கின் காலில் தூர் வாரும் பணியையும், 10:30 மணிக்கு தோவாளை பகுதியில் நீரில் மூழ்கிய பயிர்களையும் ஆய்வு செய்கிறார். மேரும், 12.30 மணிக்கு பேச்சிப்பாறை அணையில் உபரி நீர் வெளியேறுவதை பார்வையிடுகிறார்.

News October 27, 2024

குமரி மாவட்டத்திற்கு ஆதரவாக நடிகர் விஜய்?

image

நடிகர் விஜய்யின் கட்சியான த.வெ.க-வின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்று வருகின்றது. மாநாட்டில், அக்கட்சியின் கொள்கை மற்றும் செயல்த்திட்டங்கள் வாசிக்கப்பட்டன. அதில், “மணல் மற்றும் கனிமவளக் கொள்ளையை தடுக்க சிறப்பு பாதுக்காப்பு சட்டம் இயற்றப்படும்” என தெரிவித்துள்ளனர். சமீபமாக குமரியில் கனிமவள கொள்ளைக்கு எதிராக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

News October 27, 2024

நாகர்கோவிலில் சாலை விபத்தில் இளைஞர் பலி

image

குமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் கவிமணி பள்ளிக்கூடம் அருகே உள்ள புனித தெரசா மெட்ரிக் பள்ளி அருகே இன்று (அக்டோபர் 27) அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார். ஹெல்மெட் போட்டிருந்தும் கூட தலையில் வாகனத்தின் டயர் ஏறி இறங்கியது தலை நசுங்கி பலியானார். அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.