India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இந்நிலையில், குமரி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெளியில் செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்லும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. *உங்கள் பகுதி நண்பர்களுக்கு பகிருங்கள்*
வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவையொட்டி திருவனந்தபுரத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வருகிற 21, 28 மற்றும் செப்.,4 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன. திருவனந்தபுரத்தில் புதன்கிழமை தோறும் மதியம் 3.25 மணிக்கு புறப்பட்டு குழித்துறை, நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணி சென்றடையும். மறு மார்க்கத்தில் ஆக., 22, 29, செப்.5 தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும்.
வடக்கு தாமரைக்குளத்தில் அமைந்துள்ள சன்ன இரக நெல்-கோ 55 நெல் ஆதார விதைகள் உற்பத்திப்பண்ணையை ஆட்சியர் அழகு மீனா நேற்று பார்வையிட்டார். விதைப்பண்ணையில் உருவாக்கப்படும் நெல்களின் தரத்தினை எவ்வாறு கண்டறிவது என கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து பறக்கை பகுதியில் வேளாண் உழவர் விற்பனை குழுக்கள் மற்றும் விவசாயிகள் நெல் அறுபடை பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையில் இன்று 44.24 அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் 68.85 அடி தண்ணீரும், சிற்றாறு ஒன்று அணையில் 13.71 அடி தண்ணீரும், சிற்றாறு 2 அணையில் 13.81 அடி தண்ணீரும் உள்ளது. பொய்கை அணையில் 15.2 அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணையில் 49.62 அடி தண்ணீரும், முக்கடல் அணையில் 21 .60 அடி தண்ணீரும் உள்ளது.
தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாகவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி நீடிப்பின் காரணமாகவும் நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு இன்று(ஆக.,17) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
குமரி மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை விதிமீறி வாகனம் ஓட்டியதாக 3124 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில், லைசன்ஸ் இன்றி வாகனம் ஓட்டிய 18 வயதுக்குட்பட்ட 237 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும். தற்போது விபத்துகள் அதிகமாக நடப்பதால் போலீசார் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 6:00 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிற்றாறு ஒன்று அணைப்பகுதியில் 35.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், சுருளோட்டில் 23.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தொடர்ந்து, மழையினால் பேச்சுப்பாறை அணைக்கு 723 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 501 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
சுதந்திரதினத்தன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், வடசேரி, தக்கலை, மார்த்தாண்டம் உட்பட பல்வேறு வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அன்று ஊழியர்களுக்கு விடுமுறை வழங்காத 41 கடைகள், நிறுவனங்கள் ,10 உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நேற்று (ஆக.16) நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜகுமார் கூறினார்.
சிவன் கோவில்களில் பிரதோஷ நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நாளில் நந்தி பகவானுக்கும் சிவனுக்கும் பல்வேறு வகை பொருட்களினால் அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இன்று சனி பிரதோஷம் என்பதாால் அனைத்து சிவன் கோவில்களிலும், சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் சங்கமும் அறநிலையத்துறையும் செய்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.