India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1856 ஆம் ஆண்டு ஆக.,20ஆம் தேதி திருவனந்தபுரம் செம்பழுந்தியில் பிறந்த ஸ்ரீ நாராயண குருவின் இயற்பெயர் நாராயணன். சாதிக் கொடுமைகளில் கேரளாவில் பிற்படுத்தப்பட்ட & தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அடிப்படை உரிமைகள் பல மறுக்கப்பட்ட காலகட்டத்தில், அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த சீர்திருத்தவாதி. தனது 23வது வயதில் குமரி மருத்துவாழ்மலையில் 8 ஆண்டு துறவியாக வாழ்ந்தார். 20.09.1928 அன்று சிவகிரியில் சமாதி அடைந்தார்.
ஸ்ரீநாராயண குரு பிறந்த நாளை முன்னிட்டு இன்று(ஆக.,20) குமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, திருவட்டார் ஆகிய 3 வட்டங்களுக்கு முதல் முறையாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முழு முயற்சி எடுத்த தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜை சமுதாயத்தினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் ஸ்ரீ நாராயண குருவை பின்பற்றும் மக்கள் பெருவாரியாக வாழ்ந்து வருவதால் ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 20ம் தேதி அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, திருவட்டாறு ஆகிய 3 தாலுகாக்களுக்கு மட்டும் அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. அந்த விடுமுறை செப்டம்பர் 14ம் தேதி பணி நாளாக ஈடு செய்யப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கல்குளம் வட்டாட்சியராக இருந்த முருகன் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ரயில்வே நிலமெடுப்பு கூடுதல் அலகு 3 வட்டாட்சியர் சஜித் கல்குளம் வட்டாட்சியராகவும், மற்றொரு ரயில்வே நிலம் எடுப்பு வட்டாட்சியர் சுபா சஜித்துக்கு பதில் நியமிக்கப்பட்டுள்ளார்.
குமரி கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் மீது 6 கொலை வழக்கு உட்பட 27 வழக்குகள் உள்ளன. இவர் தலைமறைவாக இருந்து வரும் நிலையில், தேரூர் பகுதியில் இவர் செல்வதாக கிடைத்த தகவலின் பெயரில், இன்று(ஆக.,19) சப் இன்ஸ்பெக்டர் நிதின் செல்வராஜ் அவரைப் பிடிக்க முயன்றுள்ளார். அப்போது செல்வம் அரிவாளால் அவரை வெட்டியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து செல்வத்தை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
குமரி மாவட்டம் தென் தாமரைகுளம் இலந்தையடியை சேர்ந்தவர் அபினேஷ்(23). இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு சிறுமியுடன் பழகி, அவரை ஆபாசமாக படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் போக்கோ சட்டத்தில் இவரை கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் நேற்று(ஆக.,18) கைது செய்தனர். மேலும் வீடியோவை பதிவிறக்கம் செய்து பலருக்கு அனுப்பிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் இம்மாதம் 20 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வரை வீட்டுக்கு வீடு வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் வாக்குச்சாவடி திருத்தியமைத்தல் நடைபெற இருப்பதாக ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார். SHARE IT.
“குமுதம்” வார இதழ் ஒரு பக்க கதை மூலமாக நாடெங்கும் அறியப்பட்ட நாடகாசிரியர், நாவலாசிரியர் என பன்முகம் கொண்ட எழுத்தாளர் ஐரேனிபுரம் பால் ராசய்யா நேற்று (ஆக.17)
காலமானார். அவரது நல்லடக்கம் கேரள மாநிலம் உதியன்குளம் கரையில் இன்று (ஆக. 18) நடைபெற்றது. இதில் ஊர் மக்கள், சபையினர், பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக நேற்று மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சுருளோட்டில் 25.4 மி.மீ மழையும், சிற்றாறு மற்றும் பேச்சிப் பாறை அணைப்பகுதியில் தலா 23 மி.மீ மழையும், பாலமோரில் 20 மி.மீ மழையும் பெய்துள்ளது. மழையின் காரணமாக பேச்சுப் பாறை அணைக்கு 800 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 243 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
நாகர்கோவிலில் செயல்படும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் கிளை அலுவலகத்தில் சிறு குறு தொழில் கடன் முகாம் நாளை (ஆக. 19) முதல் செப்.6 வரை நடக்கிறது. மேலும் இதையொட்டி வரும் ஆக.23.ம் தேதி காலை நாகர்கோவில் ரோட்டரி சென்டரில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. கடன் முகாம் மற்றும் கருத்தரங்கில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.