India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் மாவட்ட கல்வி அலுவலர்களின் பணியிட மாறுதல் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலராக பணி புரியும் என். செந்தில்குமார், குமரி மாவட்ட இடைநிலை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், தூத்துக்குடி தொடக்க கல்வி அலுவலராக பணி புரியும் மேரி டயானா ஜெயந்தி நாகர்கோவில் தனியார் பள்ளி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குமரி மாவட்ட மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோதையாற்றில் அதிக தண்ணீர் வருவதாலும், பேச்சிப்பாறை அணையில் இருந்து 758 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதாலும் அது கோதையாறு தண்ணீருடன் கலந்து திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆகையால், குழித்துறை, தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அங்கிருந்து கடத்தப்பட்டதாக நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் அந்த சிறுமி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருக்கிறாரா என்பதை கண்டுபிடிக்க நாகர்கோவில் ரயில்வே போலீசார் இன்று (ஆக.21) ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் அந்த சிறுமி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 22 ஆயிரத்து 89 பேருக்கு வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அன்று காலை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். தனியாக தேர்வு எழுதியவர்கள் தேர்வு எழுதிய மையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (ஆக.,21) காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரி, நெல்லை, தென்காசி, தேனி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று நாகர்கோவில் வந்தார். நாகர்கோவில் ராமபுரம் அரசு விருந்தினர் மாளிகை வந்த அவரை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், முன்னாள் எம்எல்ஏ ராஜன், திமுக துணை செயலாளர் பூதலிங்கம் பிள்ளை, மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா உட்பட பலர் வரவேற்றனர். பின்னர் அமைச்சர் மதிவேந்தன் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுக விரிவாக்கத்திற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேற்று (20.08.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, “குளச்சல் மீன்பிடி துறைமுகம் ரூபாய் 300 கோடியில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் தரப்பட்டு அவர்களுக்கு தீர்வு காணப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நடிகர் தலைவாசல் விஜய் 2010ஆம் ஆண்டு ஸ்ரீ நாராயண குருவின் வாழ்க்கையை பதிவு செய்த “யுக புருஷன்” என்ற மலையாள சினிமாவில் நாராயண குருவாக நடித்தார். அப்போதைய கேரள முதல்வர் அச்சுதானந்தன் அந்த படத்தை பார்த்து விஜய்யை புகழ்ந்தார். அந்த ஆண்டுக்கான கேரள சினிமாவின் சிறந்த நடிகர் விருதும் தலைவாசல் விஜய்க்கு கிடைத்தது. இந்த படம் வெளியான போது கேரளாவில் இவரை கொண்டாடினர்.
கன்னியாகுமரி தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் MERIT பட்டியல் வெளியாகியிருக்கிறது. கன்னியாகுமரி தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளாமானோர் விண்ணப்பித்திருந்தனர். <
Sorry, no posts matched your criteria.