Kanyakumari

News September 11, 2024

கன்னியாகுமரி MP விஜய் வசந்துக்கு புதிய பதவி

image

நாடாளுமன்ற காங்., கமிட்டி செயலாளர்களாக ரஞ்சித் ரஞ்சன் எம்.கே.ராகவன், டாக்டர் அமர்சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாளராக கன்னியாகுமரி MP விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார். நியமிக்கப்பட்டுள்ளார் இந்த தகவலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் வேணுகோபால் நேற்று(செப்.,10) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News September 11, 2024

குமரி மாவட்ட அணை நிலவரம்

image

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 659 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 223 கன அடியும், சிற்றாறு ஒன்று அணைக்கு 90 கனஅடியும், சிற்றாறு 2 அணைக்கு 10 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 500 கன அடி, பெருஞ்சாணி அணையில் இருந்து 410 கன அடி, சிற்றாறு ஒன்று அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

News September 11, 2024

குமரி M.P. நன்றி அறிவிப்பு சுற்றுபயணம்

image

(செப்.11)கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று காலை 8.30 மணிக்கு பார்வதி புரத்தில் இருந்து நன்றி அறிவிப்பு சுற்று பயணம் மேற் கொள்கிறார். அவருடன் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மேயருமான ஆர். மகேஷ், தி.மு.க. மார்க்.கம்யூ., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

News September 11, 2024

குமரி பகவதி அம்மன் கோயிலில் ஓணம் திருவிழா

image

குமரி பகவதி அம்மன் கோயிலில் ஓணம் திருவிழா வரும் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. 1 ஆம் நாள் திருவிழாவான 14ஆம் தேதி உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி சிவப்பு நிற பட்டும், 15ஆம் தேதி திருவோணம் நட்சத்திரத்தையொட்டி கேரள பாரம்பரிய வெண் பட்டும் ,16ஆம் தேதி அவிட்டம் நட்சத்திரத்தையொட்டி சிவப்பு நிற பட்டும் அம்மனுக்கு ஓணக்கோடி பட்டு அணிவித்து சிறப்பு வழிபாடு நடக்கிறது.

News September 11, 2024

ஆட்டோ டிரைவர் கொலை: 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

புதுக்கடை அடுத்த காப்புக்காடு பகுதியைச் சோ்ந்தவர் மரியடேவிட்(56). ஆட்டோ டிரைவரான இவர் படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய நிர்மல் (26), பென்னி டாப்(37), காட்வின் ஜாண்ராஜ்(28), எழில்குமார(34) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று(செப் 10) உத்தரவிட்டார்.

News September 10, 2024

பரதநாட்டியத்தில் வென்ற மாணவிகள் ஆட்சியருடன் சந்திப்பு

image

சர்வதேச அளவிலான பரதநாட்டிய போட்டி மலேசியா கோலாலம்பூரில் உள்ள 10 மலை முருகன் கோயிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், யாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த கவிதாலயா நாட்டிய பள்ளி‌ மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பதக்கங்களையும் பரிசுகளையும் வென்றனர். இன்று (செப் 10) குமரி மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தமாக சந்தித்து மாணவ மாணவிகள் வாழ்த்து பெற்றனர்.

News September 10, 2024

கணவன் – மனைவி உயிரிழந்த வழக்கில் 2 பேர் மீது வழக்கு

image

நாகர்கோவில் திலகர் தெருவை சேர்ந்த நீலா மற்றும் அவரது கணவர் ஆகியோர் நேற்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்திய நிலையில், பக்கத்து வீட்டில் அலங்கார மின் விளக்குகள் போடப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து மின்சாரம் மீது பாய்ந்ததாக கூறப்பட்டதன் அடிப்படையில் ஒளி அமைப்பு ஏற்படுத்திய ஜெபராஜ் உட்பட 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News September 10, 2024

3.40 லட்சம் குழந்தைகள் பயன் : குமரி கலெக்டர்

image

குமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலகின் கீழ் 3 லட்சத்து 40 ஆயிரத்து 621 குழந்தைகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று(செப்.,10) தெரிவித்துள்ளார். கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் வளர் இளம் குழந்தைகள் அங்கன்வாடி மையங்களுக்கு சென்று ஊட்டச்சத்தினை உறுதிசெய்து பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News September 10, 2024

நாகர்கோவிலில் முதலமைச்சர் கோப்பை போட்டி

image

கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி இன்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இந்த விளையாட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்பி, எம்எல்ஏக்களான பிரின்ஸ், தாரகை, ராஜேஷ்குமார், மாநகராட்சி மேயர் மகேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெறுகின்றன.

News September 10, 2024

சுசீந்திரத்தில் தூய்மைப் பணி ஆட்சியர், எம்.பி பங்கேற்பு

image

சுசீந்திரம் EXNORA International and National Green Corps Kanyakumari District சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து செய்யும் தூய்மைப் பணி இன்று நடைபெற்றது. இதில் மேயர் மகேஷ், விஜய் வசந்த், மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, மாவட்ட வன அலுவலர் பிரசாந்த், மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தூய்மைப் பணியினை மேற்கொண்டனர்.

error: Content is protected !!