India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 9 வட்டாரங்கள் மற்றும் 95 கிராம ஊராட்சிகளிலும் உணவுத் திருவிழா
ஊராட்சி அளவிலான போட்டிகள் 12, 13, 14 ஆகிய தேதிகளில் அந்தந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகங்களிலும், வட்டார அளவிலான போட்டிகள் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அந்தந்த வட்டார அளவிலான கூட்டமைப்பு அலுவலகங்களிலும் நடைபெறுகிறது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று (செப்.11) தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டம் மருதங்கோடு பகுதி சர்வோதய சங்கத்தில் இருந்த மகாத்மா காந்தி உருவ சிலையின் தலை மர்ம நபர்களால் துண்டிக்கபட்டது. இதை கண்டித்து நேற்று(செப்.,11) மாலை பொதுமக்கள் மற்றும் காங்., தொண்டர்களுடன் கழுவன்திட்டை சந்திப்பில் விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட் மறியலில் ஈடுபட முற்பட்டார். அப்போது போலீசார், 2 தினங்களில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்து போராட்டத்தை தடுத்தனர்.
குமரி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவுப்படி போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் மேற்பார்வையில் 18 வயதுக்கு குறைவான பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் இருசக்கரவாகனங்களை ஓட்டி வந்ததால் 9 இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமையில் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை வழங்கப்பட்டது.
குமரி மாவட்டம் குறும்பனையை சேர்ந்த வாலிபர் ஜினு என்பவர் அதே ஊரை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலியின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வரவே, காதலி வீட்டுக்கு சென்ற ஜினு காதலியின் தம்பி தங்கையை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. திருமணம் செய்ய சம்மத கடிதம் தராத ஆத்திரத்தில் வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரையும் அவரது சகோதரரையும் குளச்சல் போலீசார் இன்று கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. நெல்லை, குமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, வெளியில் செல்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 64 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. மாவட்ட அளவில் 52 வகையான போட்டிகள், மண்டல அளவில் 12 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளில் பங்கேற்க 30000 பேர் இதுவரையிலும் பதிவு செய்துள்ளனர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.3000, ரூ.2000 மற்றும் ரூ.1000 பரிசு வழங்கப்படும்
“நாட்டின் மொத்த உற்பத்தியில் சிறு குறு நடுத்தர தொழில்களும் அங்கம் வகித்து வருகின்றன; கார்ப்பரேட் தொழில்களுக்குரிய உதிரி பாகங்கள், துணைப் பொருட்களை சிறு குறு நடுத்தர தொழில்கள்தான் உற்பத்தி செய்கின்றன; நாட்டிற்கு நிதி, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் சிறு குரு தொழில்களை பாதுகாக்க வேண்டும்” என முன்னாள் எம்பி பெல்லார்மின் வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்களும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு மாவட்டத்தில் இதுவரையிலும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 45 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை நேற்று (செப் 10) தெரிவித்துள்ளது.
நாகர்கோவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் பொத்தையடி என்ற இடத்தில் மருந்து வாழ் மலை உள்ளது. ஒரு காலத்தில் மூலிகை செடிகள் அதிக அளவில் காணப்பட்ட இந்த மலையில், தற்போது மூலிகைச் செடிகள் பார்ப்பது அபூர்வமாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த மலையில் மூலிகைச் செடிகளை அதிக அளவில் வளப்பதற்கு வனத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற காங்., கமிட்டி செயலாளர்களாக ரஞ்சித் ரஞ்சன் எம்.கே.ராகவன், டாக்டர் அமர்சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாளராக கன்னியாகுமரி MP விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார். நியமிக்கப்பட்டுள்ளார் இந்த தகவலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் வேணுகோபால் நேற்று(செப்.,10) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.