India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவில் வடிவீஸ்வரத்தை சேர்ந்தவர் சுபாஷ் (52). செய்தியாளரான இவர் நேற்று (செப் 12) வீட்டில் இருக்கும் போது திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த, கோட்டாறு போலீசார் அவரது வீட்டிற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி, ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொது விநியோக திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து நேற்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா ,“கடந்த மாதம் 45 பொது விநியோக திட்ட கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தவறான நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகிப்பது தடுக்கப்படவேண்டும். தொடர்ந்து ரேஷன் பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்” என எச்சரிக்கை விடுத்தார்
கடந்த மாதம் மதுரை நீதிமன்ற குடும்ப நல கோர்டில் கவுன்சலிங் நடத்த சென்ற வக்கீல்கள் பாலமுருகன், குமரன் ஆகியோரை திருப்பதி என்பவர் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். வக்கீல்களை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய போலீசாரை வலியுறுத்தி இன்று (செப்.13) ஒருநாள் நீதிமன்ற பணிகளை புறக்கணிக்கப்பதாக பத்மநாபபுரம் வக்கீல்கள் சங்க துணைத் தலைவர் ஏசுராஜா தெரிவித்தார்.
குமரி மாவட்டம் அரசு கழகத்தில் தொழிலாளர்களை லேபர் காண்ட்ராக்ட் விடும் திட்டம் இல்லை என அரசு ரப்பர் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மலையோர விவசாயிகள் சங்கத் தலைவர் ஜீனோ அரசு ரப்பர் கழகத்துக்கு தொழிலாளர்களை லேபர் காண்ட்ராக்ட்டுக்கு விடக் கூடாது என எழுதிய கடிதத்திற்கு ரப்பர் கழக நிர்வாகம் இவ்வாறு பதில் அளித்துள்ளது.
குமரியில் விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் காவல் அதிகாரிகளுக்கு சீருடையில் பொருத்த 400 கேமராக்கள் வழங்கப்பட்டு இருந்தது. இந்த கேமராக்கள் மூலம் ஊர்வலம் மற்றும் சிலை கரைக்கப்படும் இடங்களில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் உரையாடல்கள் வீடியோ பதிவு செய்யப்படும். இதன் செயல்பாடுகள் குறித்து இன்று(செப்.12) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி – காஷ்மீர் தங்க நாற்கர சாலையில் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் ரூ.5லட்சம் செலவில் 95 அடி உயர உயர் கோபுரமின் விளக்கு அமைக்கும் பணி இன்று(செப்.12) நடந்தது. இதற்காக ராட்சதகிரேன் மூலம் உயிர் கோபுரம் மின்கம்பம் தூக்கி நிறுத்தப்பட்டது. விரைவில் இந்த ரவுண்டானா சந்திப்பில் உயர் கோபுரம் மின்விளக்கு எரிய தொடங்கும் அதன் பிறகு இருள் சூழ்ந்த ரவுண்டனர் சந்திப்பு ஒளிவெள்ளத்தில் மிளிரும்.
இந்திய ராணுவத்தில் முதல் பெண் மேஜர் ஜெனரலான குமரி மாவட்டத்தை சேர்ந்த டெலஸ் புளோராவுக்கு மற்றுமொரு மகுடமாய், ‘தேசிய ஃபளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி உள்ளார். இதையடுத்து, முன்னாள் அமைச்சரும் தி.மு.க. தணிக்கைகுழு உறுப்பினருமான சுரேஷ்ராஜன் மாவட்ட மக்களின் சார்பிலும், தனது சார்பிலும் இன்று(செப்.,12) வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் 47 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 26 டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும் 8 பேர் விடுப்பில் உள்ளனர். இடைக்கோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பணியிடத்துக்கு மாற்று மருத்துவர் அனுப்பி வைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் மீனாட்சி நேற்று (செப்.11) தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்க்கு ஆட்கள் தேர்வு முகாம் வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. குமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான 108 அவசர ஊர்திக்கு ஆள் சேர்ப்பு முகாம் தக்கலை அரசு தலைமை மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. SHARE IT.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (செப்.12) காலை 10 மணி வரை பரவலாக மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையினால் தண்ணீர் பல பகுதிகளில் தேங்க வாய்ப்புள்ளதாகவும், சாலைப் போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் சிறிய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.