India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவிலில் செப்.,14 மற்றும் 15 ஆகிய நாட்களில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலமானது நாகராஜா திடலில் ஆரம்பித்து நாகர்கோவில் மாநகரின் முக்கிய சாலைகளான அவ்வை சண்முகம் சாலை, ஒழுகினசேரி, வடசேரி மணிமேடை சந்திப்பு, மணியடிச்சான் கோயில், வேப்பமூடு சந்திப்பு அண்ணா பேருந்து நிலையம் வழியாக செல்வதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை நேற்று(செப்.,13) அறிவித்துள்ளது.
குமரி மாவட்டம் கோழிவிளையில் இலங்கை வாழ் தமிழர்களின் அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று திடீரென்று சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மக்களிடம் உள்ள குறைகளை கேட்டறிந்தார். அவர்களின் குறைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை குமரி மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி தலைமையில் ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகள் இன்று (செப்.13) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் நாடாளுமன்ற குழு பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகையை நேரில் சந்தித்து பொறுப்பேற்றுக்கொண்டு வாழ்த்துகளை பெற்றார். அவருடன் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்நிலையில், விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்பேரில் தற்காலிகமாக சிசிடிவி கேமரா அமைக்கும் பணிகள் இன்று(செப்.,13) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு 14.09.2024 மற்றும் 15.09.2024 ஆகிய தினங்களில் வினாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற உள்ளது. இப்பகுதியிலுள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் மற்றும் FL உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை மேற்படி வினாயகர் சதுர்த்தி ஊர்வலம் முடியும் வரை செயல்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டைகள் வழங்குவது தொடர்பாக 5964 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 4180 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு, முடிக்கப்பட்டுள்ளது. இதில் 1300 குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன மீதமுள்ள குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது இம்மாத இறுதிக்குள் இந்த பணி முடிவடையும். பின்னர் அவை உரிய நபர்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 646 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 223 கன அடியும், சிற்றாறு 1 அணைக்கு 126 கனஅடியும், சிற்றாறு 2 அணைக்கு 5 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 500 கன அடி நீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 410 கனஅடி நீரும், சிற்றாறு 1 அணையில் இருந்து 150 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த 6 மாத காலமாக ரூ.5, 10, 20, 50 மதிப்பிலான முத்திரை பத்திரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்கள் பல்வேறு தேவைகளுக்காக குறைந்த மதிப்பிலான பத்திரங்கள் இல்லாததால் ரூ.100 மதிப்பிலான பத்திரங்கள் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே குறைந்த விலைமதிப்பிலான பத்திரங்கள் கிடைக்க பத்திரப்பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைபாடுகளை கேட்டு நிவர்த்தி செய்வதற்கும், சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் 14.09.2024 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. பொருட்களின் தரம் குறித்த புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.