Kanyakumari

News August 27, 2024

குமரியை சுற்றிப் பார்க்க ஒரு சூப்பர் பிளான்

image

குமரி மாவட்ட சுற்றுலா தலங்களான கன்னியாகுமரி, சுசீந்திரம், பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிபாலம், திற்பரப்புஅருவி, பேச்சிப்பாறை போன்ற சுற்றுலா இடங்களுக்கு பொதுமக்களின் வேண்டுகோளின்படி அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 50 பயணிகள் முன்பதிவு செய்தால் அவர்களின் ஊரில் இருந்தே பஸ்கள் இயக்கப்படும். தொடர்புக்கு நாகர்கோவில் – 9487599085, வணிகம் – 9487599085, குமரி – 9487599087 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News August 27, 2024

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் முகாம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் பத்மநாபபுரம் ஆர்டிஓ அலுவலக கூட்ட அரங்கில் நாளை (ஆக.28) பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கல்குளம், விலவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் வட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என பத்மநாபபுரம் ஆர்டிஓ தெரிவித்துள்ளார்.

News August 27, 2024

குமரி மாவட்டத்தில் அணைப்பகுதியில் சாரல் மழை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருஞ்சாணி அணை பகுதியில் 4.2 மில்லி மீட்டரும் நாகர்கோவிலில் 1.2 மில்லி மீட்டரும் சுருளோட்டில் 1.6 மி.மீட்டரும் பூதப்பாண்டியில் 2.4 மில்லி மீட்டரும் புத்தன் அணைப்பகுதியில் 3.4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது பேச்சிப்பாறை அணைக்கு 575 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 351 கன அடி தண்ணீரும் சிற்றாறு ஒன்று அணைக்கு 127 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

News August 27, 2024

“கழிவு நீர் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும்”

image

குமரி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “அதிமுக ஆட்சியில்தான் சுற்றுலா பயணிகள் வசதிக்காக கன்னியாகுமரியில் ரூ.8 கோடி செலவில் 2 நவீன படகுகள் வாங்கப்பட்டன. கன்னியாகுமரியில் தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கடலில் கலக்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அணை திறந்து 3 மாதமாகியும் அஞ்சுகிராமம் வரை கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை” என்றார்.

News August 27, 2024

கனிமவளம் கடத்தும் லாரிகள் சிறை பிடிக்கப்படும்: தாரகை கத்பட்

image

விளவங்கோடு MLA தாரகை கத்பட் நேற்று(ஆக.,26) கூறியதாவது, “மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான டாரஸ் லாரிகளில் இரவு பகலாக கனிம வளம் கடத்தப்படுகிறது. அனுமதி இல்லாமல் செல்லும் இந்த லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுகிறது. மார்த்தாண்டத்தில் போட்டிபோட்ட லாரிகளால் விபத்து ஏற்பட்டது. மார்த்தாண்டம் வழியாக கனிமவளம் கடத்திச்செல்லப்படும் லாரிகள் சிறைபிடிக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

News August 27, 2024

குமரி அருகே 4½ டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்

image

குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று(ஆக.26) சிராயன்குழி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது லாரியில் சிறு, சிறு மூடைகளில் மொத்தம் 4½ டன் ரேஷன் அரிசியை பதுக்கி கேரளாவுக்கு கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின்ன்ர் லாரியுடன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டு டிரைவர் அருமனை அனி(28) கைது செய்யப்பட்டார்.

News August 27, 2024

பகவதி அம்மன் கோயிலில் மாணவர்களுக்கு பரிசு

image

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆன்மிக சமய வகுப்பு மாணவர்களுக்கிடைய நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் பரிசுகல் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி, மராமத்து பொறியாளர் ஐயப்பன், கோயில் மேலாளர் செந்தில்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News August 26, 2024

விவேகானந்தர் மண்டபத்தை 19804 பேர் பார்வை

image

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள
பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவுமண்டபம்
உள்ளது. இந்த மண்டபத்தை கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையையொட்டி கடந்த 3 நாட்களில் மட்டும்
19 ஆயிரத்து 804 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு உள்ளனர். கடந்த 24 ஆம் தேதி 5977 பேரும், 25 ஆம் தேதி 8051பேரும் இன்று 5776 பேரும் பார்வையிட்டு
உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

News August 26, 2024

விளவங்கோடு முன்னாள் எம்.எல்.ஏ பரபரப்பு தகவல்

image

விளவங்கோடு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி இன்று பேட்டியளித்துள்ளார். அதில், “இந்த தேர்தலில் எனக்கு எம்.பி சீட் கிடைத்தது. ஆனால், பொன்.ராதாகிருஷ்ணன் பிடிவாதமாக இருந்ததால் அவருக்காக விட்டுக்கொடுத்தேன். மேலும், காங்கிரஸில் நடிகர் விஜய் பொறுப்பு கேட்டார். அதை மறுத்த ராகுல் காந்தி விஜயை தனி கட்சி தொடங்க கூறனார். அதன்படியே விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார்” என தெரிவித்தார்.

News August 26, 2024

குமரியில் அதிகரிக்கும் குண்டர் தடுப்புச் சட்ட கைது

image

தமிழ்நாட்டில் 1982 ஆம் ஆண்டு வன்செயல்கள், மற்றும் கள்ளச்சாராய வணிகங்கள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், போக்கிரிகள் போன்ற சமுதாய விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்டது தான் குண்டர் தடுப்புச் சட்டம். இச்சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு இதுவரை குமரி மாவட்டத்தில் 37 பேர் கைதாகி சிறையில் உள்ளனர். குற்றவாளிகள் பெருகிக்கொண்டிருப்பது வருத்தம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!