Kanyakumari

News August 28, 2024

அரசியல் கட்சிகளுடன் கலெக்டர் ஆலோசனை

image

குமரி மாவட்ட தேர்தல் பிரிவின் சார்பில் வாக்காளர் பட்டியல் வீடு வீடாக சென்று சரிபார்த்தல் தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் இன்று(ஆக.,28) நடைபெற்றது. கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News August 28, 2024

குமரியில் 207 பேர் மீது வழக்குப்பதிவு

image

106 மாத போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் நாகர்கோவில் ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இப்போராட்டத்தில் கலந்து கொண்ட 19 பெண்கள் உட்பட 207 பேர் மீது ஆசாரிபள்ளம் போலீசார் நேற்று இரவு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News August 28, 2024

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

image

நாகர்கோவிலில் மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திரியா வித்யாலயா பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியர் ராமச்சந்திர சோனி அங்கு படிக்கும் 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடமும் பள்ளி நிர்வாகத்திடமும் அளித்த புகாரின் பேரில் நாகர்கோவில் போலீசார் நேற்று போக்சோ உட்பட 4 பிரிவுகளின் கீழ் ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News August 28, 2024

மறப்போம் மன்னிப்போம் – விஜயதரணிக்கு காங். அழைப்பு

image

தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவு செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கையில், “பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியதை நம்பி விஜயதரணி பா.ஜவில் சேர்ந்தார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். அதை எண்ணி வருந்தி பொதுவெளியில் தனது ஆதங்கத்தை கொட்டி உள்ளார். பா.ஜ.வின் உண்மையான முகத்தை உணர்ந்து காங்கிரசில் மீண்டும் விஜயதரணி சேர வேண்டும். மறப்போம் மன்னிப்போம்” என குறிப்பிட்டுள்ளனர்.

News August 28, 2024

தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

image

SMRVஅரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான நேரடிச் சேர்க்கை ஆக.17 முதல் நடைபெற்று வருகிறது. இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி (ஆடை தயாரித்தல் தொழிற்பிரிவு மட்டும்) மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் ஆக.31 க்குள் விண்ணப்பிக்கலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

தேசிய விளையாட்டு தின விழா

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக தேசிய விளையாட்டு தின விழா நடைபெற உள்ளது. இதில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் ஆண், பெண் கால்பந்து விளையாட்டு, 100 மீ ஓட்டப்பந்தயம், 25 வயதுக்குட்பட்ட பிரிவில் ஆண், பெண் கையுந்து பந்து விளையாட்டு, 100மீ ஓட்டப்பந்தயம், 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் 100 மீ ஓட்டப்பந்தயம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நாளை(ஆக.29) காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது.

News August 28, 2024

பாஜக விஜயதரணி விவகாரம் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

image

சென்னையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் விஜய் தரணி பேசும் போது ஆறு மாதமாக பதவி எதுவும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டார். இது குறித்து மார்த்தாண்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜகா வில் இணைந்து தவறை விஜயதரணி தற்போது தான் உணர்ந்துள்ளார். மரத்தின் இலைகளை பார்த்து ஆடு செல்வது போல் சென்றால் இப்படி அனுபவிக்க வேண்டியது தான் என குறிப்பிட்டார்.

News August 27, 2024

கனிமவள லாரிகளை பார்த்தால் சிறை பிடித்து போராட்டம் நடத்துவேன்

image

குமரி மாவட்டத்தில் இருந்து அனுமதி இன்றி கேரளாவிற்கு கனிம வளங்களை கடத்தி செல்கின்றனர். குமரி மாவட்டம் குவாரி அதிபர்களின் கையில் சிக்கி உள்ளது. தனது தொகுதி வழியாக அதிக பாரம் ஏற்றி கனிம வளங்களை கடத்தும் லாரிகளை கண்டால் சிறை பிடித்து மறியல் போராட்டம் நடத்துவேன் என விளவங்கோடு எம்.எல்.ஏ தாரகை கத்பட் அறிவித்துள்ளார்.

News August 27, 2024

நாகர்கோவில்-சென்னை வந்தே பாரத் ரயில் அட்டவணை வெளியீடு

image

நாகர்கோவில் – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் அட்டவணையை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி எழும்பூரில் காலை 5 மணிக்கு புறப்படும் ரயில் பகல் 1:50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும், மறுமார்க்கமாக நாகர்கோவிலில் பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு எழும்பூர் சென்றடையும். புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும்.

News August 27, 2024

சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரெயில் துவக்கம்

image

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் ரயில் தினசரி இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த வந்தே பாரத் ரெயில் இம்மாத இறுதியில் துவக்கி வைக்கப்பட இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் இயக்கப்பட்டால் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரயில் பயணிகளுக்கு மிகுந்த வசதி உள்ளதாக இருக்கும் என்று ரயில் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!