India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவிலில் உள்ள கேந்திரா வித்யாலயா பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொல்லை செய்த ஆசிரியர் ராமச்சந்திரசோனி நேற்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இன்று அவரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் 15 மாணவிகள் ஆசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்தனர். வகுப்பறையில் செல்போனில் வீடியோ, போட்டோ எடுப்பார் எனவும் மாணவிகள் குற்றசாட்டியுள்ளனர் .
தமிழ் புலிகள் கட்சியின் மாநிலத் தலைவர் நாகை திருவள்ளுவனை கொலை செய்ய வேண்டும் என வாட்ஸ் அப் உரையாடல் மற்றும் கூலிப்படைகளின் கூட்டு சதி தொடர்பான தகவல் வெளியானது. இந்நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி அவருக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க வேண்டும் என குமரி மாவட்ட தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆத்தியப்பன் தலைமையில் அந்த கட்சியினர் நாகர்கோவிலில் எஸ்பி-யிடம் மனு அளித்தனர்.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த இருமாநில அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நாகர்கோவிலில் நேற்று (ஆக.28 ) நடந்தது. கூட்டத்துக்கு குமரி மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். உடன், குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சிவஞானபாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் பணியாற்றி வரும் 12 ஏ.எஸ்.பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் நாகர்கோவில் ஏ.எஸ்.பியாக பணியாற்றி வந்த யாங்சென் டோமா பூட்டியா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதிய ஏ.எஸ்.பி. யாக லலித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்னும் ஒரு சில தினங்களில் நாகர்கோவில் ஏ.எஸ்.பி.யாக பதவி பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.
குமரி மாவட்டம் வடசேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து விபச்சாரம் நடைபெற்ற வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டதில் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதை கண்டுபிடித்து அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியரக நாஞ்சில் கூட்ட அரங்கில் வருகிற 30.08.2024 அன்று முற்பகல் 10.30 மணிக்கு மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கை மனுக்களை மீனவர்கள் கூட்டத்தில் கொடுக்கும்படி ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனாவை நேரில் சந்தித்து பேரூராட்சிகளில் செய்யப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து மனு அளித்து விவாதித்தனர். இந்த நிகழ்ச்சியில் வாள்வச்ச கோஷ்டம் பேரூராட்சி தலைவர் ஜான் டென்சிங் உட்பட பேரூராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை
சேர்ந்தவர் கோபாலகிருஷ்ண (61). சாமியாரான இவர் உலக நன்மைக்காக வேண்டி கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார். இவர் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டு 1157 நாட்கள் 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து இன்று(ஆக.28) கன்னியாகுமரியில் நிறைவு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைப்பது மற்றும் அவைகளை கரைப்பது போன்றவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கலந்து கொண்டார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை(ஆக.,29) கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். நாகர்கோவில் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து அல்போன்சா பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியிலும், மாலை பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்கிறார்.
Sorry, no posts matched your criteria.