India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

#காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்டத்தொழிலாளர் மருத்துவமனையில் மருத்துவரை நியமிக்க கோரி 9வது நாளாக இன்று ரப்பர் கழக தொழிற்சாலை முன் உண்ணாவிரதம். #காலை 11 மணிக்கு வங்கதேச இந்துக்கள் மீது நடக்கும் வன்முறை தாக்குதலை கண்டித்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு வங்கதேச இந்து மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம். #மாலை 5 மணி தக்கலை பகுதிகளில் தெருமுனை கூட்டம் நடக்கிறது.

“மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைப்போல சமுதாயத்தில் சிறந்தவர்களாக விளங்கிடும் வகையில் அவர்களின் தனித்தன்மைகளை ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்காக அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையோடு இருந்தால் எதையும் சாதிக்கலாம்” என நேற்று(டிச.,3) நாகர்கோவிலில் நடந்த மற்றுத்திறனாளிகள் தின விழாவில் ஆட்சியர் அழகு மீனா பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாதம் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை கண் புரை நோய் பாதித்தவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அரசின் இளைஞர் நலம் & விளையாட்டு அமைச்சகம் மூலம் ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி ஜன.,12 முதல் 16 வரை இளையோர் கலை விழா நடக்கிறது. இதற்காக டிச.,10ல் அஞ்சுகிராமம் ரோகிணி கல்லூரியில் பேச்சு, கவிதை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கின்றன. விருப்பமுள்ளோர் dyo.kanyakumari@gmail.com என்ற இ-மெயிலில் டிச.,8ம் தேதிக்குள் முன்பதிவு செய்யலாம். தொடர்புக்கு: 98948 58822. SHARE IT

குமரி மாவட்ட ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம் வரும் 12ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அன்று காலை 11 மணிக்கு நடைபெறுகின்ற இந்த கூட்டத்தில் மகளிர் திட்டம், தெற்கு ரயில்வே திட்டங்கள் சுற்றுலாத்துறை இந்து சமய அறநிலையத்துறை, கால்நடை துறை மற்றும் மின்புலத்துறை தொடர்பாக ஆய்வுகள் நடைபெறுகின்றன. இந்த தகவலை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் நேற்று தெரிவித்தார்.

பெங்களூரில் நடைபெற்ற தேசிய உலோகவியல் விருது வழங்கும் விழாவில், குமரி மாவட்டம் காப்புக்காடு பகுதி விஞ்ஞானி டாக்டர் டி.பி.டி. ராஜன், இந்திய அரசின் எஃகு அமைச்சகத்தால் வழங்கப்படும் தேசிய உலோகவியலாளர் விருதைப் பெற்றார். துறையின் மத்திய அமைச்சர் குமாரசாமி அவருக்கு இந்த விருதை வழங்கினார். திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய அரசின் CSIR நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றும் அவரை பலரும் பாராட்டினர்.

குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்: 18 கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2 அணைகளில் முறையே 14.59 மற்றும் 14.69 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 41.47 நீரும், 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணியில் 60.24 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 24 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.7 அடி நீரும் இருப்பு உள்ளது.

சுவாமி தோப்பு பூஜித குரு பாலா பிரஜாபதி அடிகளார் மனைவி ரமணி பாய் இன்று காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எஸ்டிபிஐ கட்சி தலைவர் உள்ளிட்டோர் நாளை சுவாமி தோப்பு வருகிறார்கள்.

சுவாமி தோப்பு குரு பால பிரஜாபதி அடிகளார் மனைவி ரமணிபாய் இன்று காலமானதை தொடர்ந்து தமிழகமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பால பிரஜாபதி அடிகளாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது மனைவி மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து, ரமணி பாய் மறைந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உற்றத்துணையை இழந்து வாடும் அவருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

நாகர்கோவில் தொழில் முதலீட்டு கழக கிளையில் சிறப்பு குறு சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில்களுக்கான சிறப்பு கடன் முகாம் 02.12.2024 முதல் 16.12.2024 வரை (அலுவலக வேலை நாட்களில்) நடைபெற்று வருகிறது. இம்முகாமில் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு கடனுக்கான விண்ணப்பங்களை கொடுத்து கடன் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.