India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி வந்த அமைச்சர் எ.வ. வேலுவை இன்று (செப்.4) நேரில் சந்தித்த விஜய் வசந்த் எம்பி, குமரி மாவட்டம் விரிகோடு பகுதியில் அமைய இருக்கும் ரெயில்வே மேம்பாலத்தை அந்த பகுதி மக்களின் கருத்தைக் கேட்டு அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப கட்ட வேண்டும் எனவும், ஊரை ஒதுக்கி மேம்பாலம் கட்டும் திட்டத்தை கை விட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
விஜய் நடித்துள்ள “கோட்” திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி பேரூராட்சி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் படகில் கோட் படம் குறித்து ப்ரோமோஷன் செய்துள்ளனர்.
கன்னியாகுமரியில் இன்று காலை ஒருபுறம் கடல் சீற்றமாகவும் மறுபுறம் கடல் உள்வாங்கியும் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி கடலில் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகளை சுற்றுலா போலீசார் வெளியேற்றினர். இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , பால்வளத்துறை அமைச்சர். த.மனோ தங்கராஜ் தலைமையில், மாவட்ட ஆட்சியர் த.ஆர். அழகுமீனா, முன்னிலையில், இன்று (செப்.4) காலை 8.30 மணிக்கு மார்த்தாண்டம் மேம்பாலத்தினை ஆய்வு மேற்கொண்டனர். அளவு மீட்டர் டேப் வைத்து சாலையின் அகலத்தினை அளவீடு செய்தனர்.
குமரி மாவட்டத்தில் முந்திரி சீசன் தொடங்கியுள்ள நிலையில், தோட்டுடன் கூடிய முந்திரி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பொதுவாக தோட்டுடன் கூடிய முந்திரி 200 ரூபாய்க்கு விற்பனை ஆகும். ஆனால் வரத்து அதிகமாக உள்ளதால் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அரசு தோட்டுடன் கூடிய முந்திரியை 200 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தொடர்ந்து பல ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஹவுராவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ஹவுரா ரயிலும், இம்மாதம் 7ம்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாகர்கோவிலில் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரை பயன்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதனை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தங்கள் பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களை கண்காணிக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டு உள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. அதன்படி இம்மாதம் 12ம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சொந்த ஊருக்கு சென்று வருபவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று நாகர்கோவில் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்வதற்காக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடுக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்திலும் தாழக்குடி சமுதாய நலக்கூடத்திலும் நாளை (5ம் தேதி) நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என ஆட்சியர் அழகுமீனா நேற்று தெரிவித்துள்ளார்
மார்த்தாண்டத்தில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பல மாதங்களாக சாலை மோசமாக பழுதடைந்துள்ளது. இன்று அமைச்சர் வேலு ஆய்வு செய்ய வருவதை ஒட்டி நேற்று இரவு தற்காலிகமாக மண் போட்டு நிரப்பி தார் போடும் பணி நடந்தது. இதுவரை பழுது பார்க்காமல் திடீரென அமைச்சர் வருகைக்காக தார் போடுவதால் ஆத்திரமடைந்த சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் தார் போடுவதை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
Sorry, no posts matched your criteria.