India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை காலை 10:30 மணிக்கு மீனவ குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மீனவர்கள் தங்களுடைய தேவைகள் மற்றும் அரசு துறைகள் சார்பில் தங்களுக்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து மனுக்கள் அளிக்கலாம். இந்த மனுக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பபட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.
பழைய செல்போன்களை விலைக்கு வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். அவை திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக இருக்க வாய்ப்பு உள்ளது என குமரி போலீஸ் எஸ்.பி. சுந்தரவதனம் நேற்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது,”99% சைபர் குற்றங்கள் செல்போன்களால் ஏற்படுகிறது. செல்போன் திருட்டு புகார் அதிகம் வருகிறது. செல்போன் கீழே கிடந்துஎடுத்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
2008 ஆம் ஆண்டு குழித்துறை ராஜையன், அவரது குழந்தைகள் 3 பேர் மற்றும் தாயாரை முன்விரோதம் காரணமாக படந்தாலுமூடு சுரேந்திரன் உட்பட 7 பேர் சேர்ந்து வெட்டியதில் 5 பேரும் காயமடைந்தனர். நாகர்கோவில் மகிளா விரைவு கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் நேற்று நீதிபதி சுந்தரய்யா குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு 3 ஆண்டுகளும், 4 பேருக்கு 2 ஆண்டுகளும் மற்றும் தலா ரூ.3000 அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 70 வது நினைவு நாளான இன்று(செப்.26) காலை 10:30 மணிக்கு கோட்டாறு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் பெருமதிப்பிற்குரிய தளவாய்சுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதிமுகவினர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுகனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் இது தொடர்பாக கருத்து கேட்டு கூட்டம் வருகிற அக்.1ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் கருத்துக்கு ஏற்ப கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று அறிவித்துள்ளார். நவராத்திரி விழாவையொட்டி கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதில் அவர் கூறியுள்ளார்
கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அக்.1ல் கருத்து கேட்பு கூட்டம் இருந்தது. இந்நிலையில், தற்போது கருத்துக்கேட்பு கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குமரி பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ அலுவகத்தில் அக்.1ல் நடக்கவிருந்த கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் மீனவர்கள் சிலர் காச்சா மூச்சா வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள் இதனால் மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்று(செப்.25) நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய ஆட்சியர் காச்சா மூச்சா வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கக்கூடாது மீறி மீன்பிடித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
குமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 81 ஏக்கர் நிலத்தில் சித்த வர்ம பல்நோக்கு உறைவிட மருத்துவமனை அமைப்பது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் ஆலோசனை நேற்று நடைபெற்றது. இந்த வகையில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நேற்று (செப்-24) நடைபெற்றது.
குமரி மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 27 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2021-இல் 11 திருமணங்களும், 2022-இல் 8, 2023-இல் 6, 2024-இல் தற்போது வரை 2 திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. குழந்தை திருமணம் நடத்துபவர்கள், துணை புரிபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதமும், 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். 1098, 181 ஆகிய எண்களில் இதுபற்றி புகார் தெரிவிக்கலாம்.
குமரி மாவட்ட எஸ்.பி., சுந்தரவதனம் நேற்று கூறியதாவது, “கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் குறைந்துள்ளது. மாவட்டம் முழுவதிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்ய காலதாமதம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அது உண்மை இல்லை எனது கவனத்திற்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.