India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று(செப்.,28) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர், மதுரை, தேனியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மழை நீர் தேங்கவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் குடையுடன் செல்வது நல்லது. SHARE IT.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் வடகிழக்கு பருவமழை இன்று(செப்.28) தொடங்கும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பிற்பகலில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வட கிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மிடாலம் எள்ளுவிளை பாலகிருஷ்ணன்-மேரி சைலஜா தம்பதியரை, பாலகிருஷ்ணனின் சகோதரர் பொன்னப்பன் அவரது மனைவி நேசம்மாள் சேர்ந்து சொத்து பிரச்சனை காரணமாக கடந்த 8.8.2006 அன்று அரிவாளால் தாக்கி விட்டு தப்பினர். இரணியல் கோர்டில் நடந்து வந்த இந்த வழக்கில் நீதிபதி அமிர்தீன், பொன்னப்பனுக்கு 3 ஆண்டு சிறை, நேசம்மாளுக்கு 1 ஆண்டு சிறை, இருவருக்கும் சேர்த்து ரூ.15,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
இன்று (செப்.28) உலக ரேபிஸ் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் உலக ரேபிஸ் தின இன்று கொண்டாடும் விதமாக ரேபிஸ் என்ற வெறிநோய் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெறும் விதமாவும், அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் நாளை இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் மாதந்தோறும் அன்னதான உண்டியல் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த செப்டம்பர் மாதத்துக்கான அன்னதான உண்டியல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் ஆய்வாளர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலையில் நேற்று (செப்.27) திறந்து எண்ணப்பட்டது. இதில் காணிக்கையாக 74 ஆயிரத்து
704 ரூபாய் வசூலானது.
ஓமன் நாட்டு கடலில் சிக்கி தவித்த 4 குமரி மீனவர்கள் உட்பட 12 மீனவர்கள் பத்திரமாக இந்தியா வருகின்றனர்.
ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது படகு பழுதடைந்து வழி தவறி ஓமன் நாட்டு எல்லைக்குள் புகுந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் உட்பட 12 இந்திய மீனவர்கள் பத்திரமாக மீட்கபட்டு இந்தியாவிற்கு வருவதாக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று (செப்.27) தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கடம்ப விளாகம், தெள்ளாந்தி, ஆனைக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் யானைகள் புகுந்து விளை நிலங்களை நாசம் செய்து வருகிறது. கடம்ப வளாகத்தில் நேற்று முன்தினம் யானைகள் புகுந்து வாழை, தென்னை மற்றும் நெல் வயல்களை அளித்து நாசம் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் இன்று (செப்.27) தெரிவித்துள்ளார்.
கீழ்குளம் பகுதியில் இன்று (செப்.27) காலை சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் சாலையோர மின் கம்பத்தில் மோதியது. ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடி உள்ளார். இது குறித்து புதுக்கடை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அங்கு போலீசார் சென்று சோதனை செய்தபோது வேனில் இருந்த 35 கேன் மண்ணெண்ணெயை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கேரளாவிற்கு கடத்திச் செல்ல விருந்தது தெரியவந்தது.
குமரி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜான் விடுத்துள்ள செய்தி குறிப்பில், குமரி மாவட்டத்தில் சுமார் 23,100 ஹெக்டர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தினை மத்திய அரசு .அறிமுகப்படுத்துகிறது. இந்த திட்டத்தில் காப்பீடு செய்ய இம்மாதம் 30ஆம் தேதி கடைசி நாளாகும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்டத்தில் நடைபெற்றது. 29 ஆயிரத்து 372 பேர் இந்த போட்டியில் பங்கேற்க பதிவு செய்திருந்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகிற 29ஆம் தேதி நாகர்கோவில் எஸ்எல்வி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்பட இருப்பதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.