India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவில் அருகே நேற்று முன்தினம்(மார்ச் 22) ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் குளச்சல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 குழந்தைகளும் இதில் அடங்குவர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவில் உடலுக்கு ஒவ்வாமை தரக்கூடிய ஏதாவது கலந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
#இன்று(மார்ச் 24) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க கோரி, கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை முன்பு 103வது நாளாக தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது#காலை 10:30 மணிக்கு தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி கொடுப்பதை கண்டித்து ராணி தோட்டம் TNSTC தலைமை அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் CITU ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் பொது இடத்தில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் பொது இடத்தில் மது அருந்தியதாக 218 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் இன்று தெரிவித்துள்ளனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.*நண்பர்களுக்கு பகிர்ந்து உஷார் படுத்தவும்
குமரியில் இருந்து நேற்று மாலை திப்ருகருக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த ரயிலில் படுக்கை சார்ந்த பொருட்கள் விநியோகிக்கும் தீப் கொகைய், அயான் கொனாய் ஆகியோருக்கும் சமையல் பிரிவில் பணிபுரியும் தபான் மண்டல், கைப் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அவர்களுக்குள் கைகலப்பும் நடந்தது. இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் நேற்று இரண்டு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பனச்சமூடு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சமி (40). கஞ்சா வியாபாரியான இவர் மீது அருமனை களியக்காவிளை, பழுகல் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பான வழக்குகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி ஸ்டாலின் பரிந்துரை செய்தார். அதன் பெயரில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
குமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் புகழ்வாய்ந்தது. இங்கு பகவதி அம்மன் சுயம்புவாக புற்றுவடிவில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இங்கு மண் சோறு உண்டால் பிள்ளை வரம் கிடைக்கும். தாலி காணிக்கை செலுத்தினால் திருமண வரம் கிட்டும் என்பதும் நம்பிக்கை. 27 தீபங்கள் ஏற்றி, அம்மனை 9 முறை சுற்றி வந்தால் தோஷங்கள் யாவும் நீங்கும். நைவேத்தியம் செய்து வழிபட்டால் மண்டையிடி குணமாகும்,
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் மார்ச் 31 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதற்காக குமரி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது தாம்பரத்தில் இருந்து மார்ச் 28 மாலை 6 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு குமரி சென்றடையும். மார்ச் 31 அன்று இரவு 8.30 மணிக்கு குமரியில் புறப்பட்டு, மறுநாள் காலை 8.55 க்கு தாம்பரத்தில் வந்தடையும். இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
குலசேகரப்புதூரைச் சேர்ந்தவர் வைரவன். இவரும், இவரது நண்பர் முகேஷ் என்பவரும் கோவில் திருவிழாவிற்கு சென்றபோது அங்கு நடந்த தகராறில் வைரவன், இசக்கி ராஜா, முகேஷ் ஆகியோர் தடுத்து தகராறை விலக்கி விட்டனர். இந்நிலையில் குலசேகரன்புதூர் சந்திப்பில் அவர்கள் நிற்கும் போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை அரிவாளால் வெட்டியது. இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் இன்று 17 புதிய பேருந்துகள் வழி தடத்தை மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோ தங்கராஜ், ஜே.ஜி பிரின்ஸ், தாரகை கத்பர்ட், துணை மேயர், மண்டலத்தலைவர் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.*பஸ் பயணிகளுக்கு பகிரவும்*
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பரப்பு பகுதியில் 37 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரியில் 7, அப்பர் கோதையார் 5, சிற்றாறு இரண்டு 4, கொட்டாரம் 3, சிற்றாறு ஒன்று 2, லோயர் கோதையார் , கல்லார் மற்றும் களியல் பகுதிகளில் தலா ஒரு மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.