Kanyakumari

News November 18, 2024

குமரியில் 442 மனுக்கள் பெறப்பட்டன

image

குமரி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 442 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதாக ஆட்சியர் அலுவலகம் தகவல் அளித்தது.

News November 18, 2024

குமரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

குமரி மாவட்டத்தில் நவம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் 22.11.2024 அன்று நாகர்கோவில் ஆட்சித்தலைவர் அலுவலக, நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து அக்டோபர் மாதம் பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் வழங்கப்படும். விவசாயிகள் இதில் கலந்துகொள்ள ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News November 18, 2024

அதிமுகவில் மீண்டும் தளவாய் சுந்தரத்திற்கு பொறுப்பு

image

அதிமுகவில் குமரி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்.6 இல் ஆர்.எஸ்.எஸ் பேரணியில் பங்கேற்றதால் அவர் தற்காலிகமாக அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு வருத்தம் தெரிவித்ததையடுத்து, மீண்டும் அவர் அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

News November 18, 2024

குமரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

குமரி மாவட்டத்தில் நவம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் 22.11.2024 அன்று நாகர்கோவில் ஆட்சித்தலைவர் அலுவலக, நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து அக்டோபர் மாதம் பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் வழங்கப்படும். விவசாயிகள் இதில் கலந்துகொள்ள ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News November 18, 2024

குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு

image

குமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு டிச.03ஆம் தேதி குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார். டிச.,03ஆம் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக டிச.,14ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

News November 18, 2024

வ.உ.சி.யின் தியைகத்தை போற்றுவோம்: MP விஜய் வசந்த்

image

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை தனது முயற்சியால் உடைத்தெறிந்து, இந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்களித்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை 88வது நினைவு தினமான இன்று(நவ.,18), நாட்டுக்காக அவர் செய்த தியாகத்தை போற்றுவோம் என கன்னியாகுமரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

News November 18, 2024

நாளை குமரி வரும் சட்டமன்ற பொது கணக்கு குழு 

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் குழுவினர் நாளை(நவ.,19) குமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கின்றனர். காலை 9.30 மணிக்கு குமரி அரசு சுற்றுலா மாளிகையில் பொது கணக்கு குழு கூடுதல் நடக்கிறது. பின் குமரியில் பல்வேறு இடங்களில் சென்று வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிடுகின்றனர். மாலை 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடக்கிறது.

News November 17, 2024

வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு கூட்டம்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், கன்னியாகுமரி வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கே.விவேகானந்தன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்தனர்.

News November 17, 2024

பகவதி அம்மன் கோவில் நடைதிறப்பு 1 மணி நேரம் நீட்டிப்பு

image

குமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்களின் தரிசனத்துக்காக தினமும் அதிகாலை 4-30மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12:30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதே போல் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8:30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் சபரிமலை சீசனையொட்டி மதியம் 1 மணிக்கும் இரவு 9 மணிக்கும் அடைக்கப்படுகிறது. இதன்மூலம் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News November 17, 2024

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 5,183 பேர் விண்ணப்பம்

image

குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 15 லட்சத்து 65 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இன்றும் இந்த முகாம் நடைபெறுகிறது. குமரி மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு முகாமில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் இதுவரை 5,183 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.