Kanyakumari

News September 29, 2024

அணுக்கனிம திட்டத்தை கைவிட வேண்டும் – அன்புமணி

image

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மணவாளாக்குறிச்சியில் உள்ள மத்திய அரசின் IREக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருளுக்காக இனயம், ஏழுதேசம் உட்பட்ட பகுதியில் 1144 ஏக்கர் பரப்பில் சுரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளது. தமிழக மக்களுக்கு தீங்கை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது.  ஏற்கனவே வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்

News September 29, 2024

குமரி மாவட்ட உறுதி மொழி ஆணையர் நியமனம்

image

நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் பொன். மாதவன் உட்பட 4  வழக்கறிஞர்களை உறுதிமொழி ஆணையராக மதுரை ஐகோர்ட் பதிவாளர் நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதில் வழக்கறிஞர் பொன்.மாதவன் ஏற்கனவே தமிழ்நாடு அரசின் நோட்டரி பப்ளிக்காகவும், பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். இதற்கான சான்றிதழை கன்னியாகுமரி மாவட்ட நீதிபதி பொன். மாதவனிடம் வழங்கினார்.

News September 29, 2024

குமரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

image

“நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனை இல்லை” என்ற வாசகம் அடங்கிய துண்டு பிரசுரத்தை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்டார்“ ஒவ்வொரு கடைகளுக்கும் அவர் நேரடியாகச் சென்று அந்த துண்டு பிரசுரத்தை கொடுத்து, கடைகளில் முன்பு அதை பொதுமக்கள் பார்க்கும் வகையில் வைக்கும் படி அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News September 29, 2024

காரில் வைத்து பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை

image

நித்திரவிளை அடைக்காகுழியைச் சேர்ந்தவர் அபிலாஷ் பெர்லின்(42). களியக்காவிளை அருகே கேரள மாநிலம்  பாறசாலையில் ஊட்டச்சத்து நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இவரது நிறுவன பெண் ஊழியரை பூவார் பகுதியில் பொருட்கள் சப்ளை செய்ய வேண்டும் என காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ய முயல, அந்த பெண் தப்பி ஓடினார். இதுகுறித்த புகாரில் பாறசாலை போலீசார் அபிலாஷ் பெர்லினை கைது செய்தனர்.

News September 29, 2024

மனோ தங்கராஜ் அமைச்சரவையில் இருந்து நீக்கம்

image

திமுக பவள விழாவை நிறைவுற்றதையடுத்து தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News September 28, 2024

நாகர்கோவில் கடைகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா இன்று (செப்-28) நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா என நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News September 28, 2024

காந்தி ஜெயந்தி ஒட்டி காந்தி மண்டபத்தில் விழும் அபூர்வ ஒளி

image

குமரி காந்தி மண்டபத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு காந்தியின் நினைவிடம் உள்ளது. அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி அன்று பகல் 12 மணிக்கு அபூர்வ சூரிய ஒளி இதன் மீது விழும். இந்த அபூர்வ ஒளியை காண ஏராளமான சுற்றுலா பணிகள் வருகை தருவர். இந்த ஆண்டு வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி 12 மணிக்கு காந்தி நினைவு மண்டபத்தில் அவரது அஸ்தியில் அபூர்வ ஒளி விழுவதை பார்க்கலாம்.

News September 28, 2024

குளச்சல் ATM-ல் கொள்ளை முயற்சி: வட மாநிலத்தவர் கைது

image

குளச்சல் அருகே நேற்று இரவு போலீசார் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது, தனியாருக்கு சொந்தமான ATM-லிருந்து ஒருவர் தப்பி ஓடினார். CCTV காட்சிகளை வைத்து அசாம் மாநிலத்தை சேர்ந்த சம்சுல் அலி என்பவரை இன்று(செப்.,28) கைது செய்தனர். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சின்ன & துறைமுகத்தில் முட்டம் துறைமுகத்தில் வேலைக்கு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 28, 2024

தக்கலை அருகே 30 கிலோவில் அதிசய தடியங்காய்

image

குமரி மாவட்டம் தக்கலை முல்லைநகர் வக்கீல் ஜோன்ஸ் இம்மானுவேலுக்கு கோழிப்போர் விளையில் விவசாய நிலம் உள்ளது. இவர் இங்கு நட்டுள்ள கொடிப்பயிர்களுக்கு இடையில் பெரிய தடியங்காய் காய்த்திருந்தது. அதை பறித்து எடைபோட்டபோது 30 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இதை அவர் அவரது வீட்டின் முன்பு வைத்துள்ளார். இதை பலரும் பார்த்துச்செல்கின்றனர்.

News September 28, 2024

தனியார் மூலம் குப்பை சேகரிக்கும் முறையை ரத்து: தீர்மானம்

image

நாகர்கோவில் மாநகராட்சியில் நேற்று நடந்த கூட்டத்தில், குப்பை சேகரிப்பில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடப்பதாலும், இதனால் மாநகராட்சிக்கு நிதி இழப்பீடு ஏற்படுவதாலும் தனியார் மூலம் குப்பை சேகரிக்கும் முறையை ரத்து செய்யக்கோரி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும் என மேயர் மகேஷ் கூறினார். இதற்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் தெரிவித்ததை அடுத்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

error: Content is protected !!