Kanyakumari

News October 1, 2024

குமரியில் இரவு 7 மணி வரை மிதமான மழை

image

தமிழகத்தில் அடுத்த சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பொதுவாக ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் லேசான மழை பதிவாகியுள்ளது.இந்நிலையில் இன்று(அக்.1) இரவு 7 மணி வரை குமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News October 1, 2024

குமரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படும் 22 இடங்கள்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது அதிகம் பாதித்த 22 இடங்களில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளது. அகஸ்தீஸ்வரம் 11 தோவாளை 13 கல்குளம் 3 விளவங்கோடு 25 திருவட்டார் 14 கிள்ளியூர் 10 இந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திவுள்ளது.

News October 1, 2024

சாமியார் மடத்தில் விக்ரகங்களுக்கு வரவேற்பு அளிக்க தீர்மானம்

image

குழித்துறை ஸ்ரீ ஐயப்ப சேவா சங்க தலைவர் ஜெயமோகன் தலைமையில் சங்க கூட்டம் நேற்று(செப்.,30) நடந்தது. அதில் பத்மநாபபுரத்திலிருந்து இன்று(அக்.,1) வருகை தரும் விக்ரகங்களுக்கு சாமியார் மடத்தில் சிறப்பான வரவேற்பு அளித்து, சிராயன்குழி முதல் சாங்கை, மார்த்தாண்டம், குழித்துறை மகாதேவர் ஆலயம் வரை அழைத்து வரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

News September 30, 2024

போக்குவரத்து விதிகளை மீறியதாக 342 வழக்கு பதிவு

image

நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் நேற்று(செப்.29) ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் போலீசார வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டியது என விதிகளை மீறிய வாகனங்கள் மீது 342 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3.64 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.

News September 30, 2024

காந்தி ஜெயந்தி அன்று மதுபான கடைகள் செயல்படாது – ஆட்சியர்

image

காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 02.10.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் FL1, FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News September 30, 2024

குவாரிகளில் எடுக்கப்பட்ட கல் குறித்து ஆய்வு நடத்த கோரிக்கை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் குவாரிகளில் இருந்து கல் மற்றும் எம் சாண்ட் எடுக்கப்பட்டு வருகின்றன. சில குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவையும் விட அதிகமாக கல் மற்றும் எம்சாண்ட் எடுக்கப்படுவதால் குமரி மாவட்டத்தில் இயற்கை வளம் அழிந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் குவாரிகளில் எடுக்கப்பட்ட கல் மற்றும் எம் சாண்ட் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News September 30, 2024

12 மீனவர்கள் நாளை கொச்சி வருகை: குமரி கலெக்டர்

image

குமரியை சேர்ந்த அருளப்பன் என்பவரது விசைப்படகில் கடந்த 11ம் தேதி குமரியை சேர்ந்த 4 பேர் உட்பட 12 பேர் கொச்சியிலிருந்து மீன் பிடிக்க சென்றனர். அப்போது படகு பழுது ஏற்பட்டு ஓமன் நாட்டு கடலில் தத்தளித்த நிலையில் சரக்கு கப்பல் மூலம் மீட்கப்பட்டனர். தொடர்ந்து 12 பேரும் நாளை(அக்.,1) கொச்சி துறைமுகம் வர கடலோர காவல் படை, மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டதக என ஆட்சியர் அழகு மீனா தெரிவித்தார்.

News September 30, 2024

டோல்கேட்டை மூட வலியுறுத்தி முற்றுகை போராட்டம்: காங்கிரஸ்

image

நாகர்கோவில் அருகே திருப்பதி சாரத்தில் டோல்கேட் உள்ளது. இந்த டோல்கேட் காரணமாக பொதுமக்களும் விவசாயிகளும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் 40 கிலோ மீட்டர் தூரத்திற்குள் 2 டோல்கேட் உள்ளதால் இதனை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்., தலைவர் நவீன்குமார் நேற்று(செப்.,29) அறிவித்துள்ளார்.

News September 30, 2024

குமரியில் சிறுவர்கள் ஓட்டி வந்த 15 பைக்குகள் பறிமுதல்

image

கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளர் பிரபு, போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் கன்னியாகுமரி பகுதியில் 18 வயது குறைவான சிறுவர்கள் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காகவும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஒட்டி வந்ததாகவும் 15 இருசக்கர வாகனங்களை இன்று (செப்.29) பறிமுதல் செய்து அபராதம் விதித்தனார். அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்களை போலீசார் வாகனத்தில் இருந்து அகற்றினர்.

News September 29, 2024

டாரஸ் லாரி மோதி ட்ரெய்லர் லாரி கவிழ்ந்து விபத்து

image

மயிலாடியைச் சேர்ந்தவர் நாராயண செல்வம். இவர் ட்ரெய்லர் லாரியில் சிற்பக்கல் ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரத்தில் இருந்து மயிலாடிக்கு சென்று கொண்டிருந்தார். குமாரபுரம் அருகே சென்று கொண்டிருக்கும்போது பின்னால் சிபின்தாஸ் என்பவர் ஓட்டி வந்த டாரஸ் லாரி திரும்பும்போது ட்ரெய்லர் லாரி மீது மோதியது.இதில் ட்ரெய்லர் லாரி கவிழ்ந்து நாராயணசெல்வத்திற்கு காயம் ஏற்பட்டது. ஆரல்வாய்மொழி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!