India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காந்தியடிகளின் 156-வது பிறந்தநாளையொட்டி குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா அவர்கள், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்கள் முன்னிலையில் இன்று(02.10.2024) நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் காமராஜர் வணிக வளாகத்தில் அமைந்துள்ள கதர் கிராம அலுவலகத்தில், சிறப்புத் தள்ளுபடி முதல் விற்பனையினை தொடங்கி வைத்து வாடிக்கையாளருக்கு வழங்கினார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி விடுத்துள்ள செய்தியில்; காந்தி மகானின் பிறந்த தினத்தில் அவர் கற்றுத்தந்த பாதையை பின் தொடர சபதம் எடுப்போம். அவர் நமக்கு விட்டுச் சென்ற ஆயுதங்களைக் கொண்டு மத நல்லிணக்கம் தழைத்தோங்க போராடுவோம். வாழ்க மகாத்மா காந்தி புகழ் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரிக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் கடலில் சூரியன் உதயம் ஆகும் காட்சியையும் மாலையில் மறையும் காட்சியையும் பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், இன்று (அக்.2) சூரிய உதயத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் கடற்கரையில் கூடியிருந்தனர். ஆனால் மழை மேகம் காரணமாக சூரிய உதயம் இன்று தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆட்சியர் அழகு மீனா வெளியிட்ட செய்தி குறிப்பில், போதிய வசதி இல்லாத செயற்கை கருத்தரித்தல் மையங்களில் கடந்த மாதம் பிரசவம் பார்த்த 2 தாய்மார்கள் பிரசவத்தின்போது இறந்துவிட்டனர். கர்ப்பகால சிக்கல், பிரசவத்தின்போது தாய் – சேய் உயிர்பாதுகாக்கும் அனைத்து வசதிகள் கொண்ட மையங்கள் தாய்மார்களை பிரசவத்துக்கு எடுக்கொள்ள வேண்டும். வசதிகள் இலலாத நிலையங்கள் வெறும் கருத்தரிப்பு மையங்களாக செயல்பட முடியாது என்றுள்ளார்.
பள்ளிகளுக்கு வரும் 6 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அரசு உத்தரவிட்டும் அதை பின்பற்றாமல் உள்ளனர். எனவே இதை தடை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவில் மாநகரில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அபாயகரமாக வாகனம் ஓட்டுதல், மூன்று நபர்கள் பயணம் செய்தல், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல் உட்பட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் மீது நேற்று(அக்.01) மொத்தம் 362 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மது அருந்திய ஒட்டுநரின் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. நாகர்கோவில் மாநகர போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
பத்திரப்பதிவுத்துறையில் நடைபெறும் முறைகேடுகள், வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணம் உயர்வு, மின்சார கட்டண உயர்வு போன்றவைகளை கண்டித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் அதிமுக தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.
அழிகால் ஜெகன் என்பவருக்கும், அவரது மனைவி ஜோஸ்லினுக்கும் இடையே தகராறு காரணமாக ஜோஸ்லின் தன் மகளுடன் பார்வதிபுரத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மனைவி ஜோஸ்லினை அரிவாளால் ஜெகன் வெட்டியதாக நேசமணிநகர் போலீஸார் ஜெகன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி அசன் முகமது மனைவியை அரிவாளால் வெட்டிய ஜெகனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2023-24 ஆம் நிதி ஆண்டில் மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து விருது வழங்கப்படவுள்ளது. தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு முதலாம் பரிசாக ரூ.1,00,000, இரண்டாம் பரிசாக ரூ.60,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.40,000 வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்தார்
தமிழகத்தில் அடுத்த சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பொதுவாக ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் லேசான மழை பதிவாகியுள்ளது.இந்நிலையில் இன்று(அக்.1) இரவு 7 மணி வரை குமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.