India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்தில் நடத்தப்படும் பெண்கள் தங்கும் விடுதிகள், கல்லூரி மாணவியர் விடுதிகள், மகளிர் விடுதிகள் அனைத்தும் உரிமம் பெற http://tnewp.com இணையதளத்தில் உடனே விண்ணப்பித்து நகலினை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அரசிடம் பதிவு மேற்கொள்ள விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று தெரிவித்தார். தவறினால் சட்டப்படி 2 ஆண்டு காலம் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றார்.
குமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் நேற்று(அக்.02) வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்த்தாண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலம் அடிக்கடி சேதமடைந்து வருகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சேதமடைந்த நிலையில், அது சரி செய்யப்பட்டு போக்குவரத்து நடைபெற்ற வருகிறது. தற்போது மீண்டும் பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பாலத்தில் போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்று அதில் கூறி உள்ளார்.
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 805 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 387 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 551 பெருஞ்சாணி அணையில் இருந்து 160 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 554 பெருஞ்சாணி அணைக்கு 54 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
குமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை கடல் பகுதியில் 1.1 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் நேற்று(அக்.02) தெரிவித்துள்ளது. மேலும், கரையை நோக்கி அலைகள் கடந்து வரக்கூடும் என்பதால் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கடற்கரை பகுதிகளில் நீர் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி, திரு நயினார் குறிச்சி கபடி அணியை சேர்ந்த வீராங்கனையும், இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியுமான ரேஷ்மா 19 வயதுக்குட்பட்டோருக்கான தமிழக கபடி அணிக்கு தேர்வாகியுள்ளார். இவர், கடந்த வருடம் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கபடியில் தமிழக அணி சார்பில் விளையாடி முதல் பரிசை பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழக கபடி அணிக்கு தேர்வாகியுள்ள ரேஷ்மாவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். SHARE IT.
குமரி மாவட்டத்தில் நிகழாண்டில் ரூ.3.90 கோடிக்கு கதர் ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ரா.அழகுமீனா தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு ரூ.3.50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது, 3 கிராமிய நூற்பு நிலையங்கள், 1 கதர் உப கிளை மற்றும் பிற உற்பத்தி அலகுகள் செயல்பட்டு வருகின்றன.
குமரி அரசுத்துறைகளில் கடந்த 5 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கியதாக 39 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2020 – 7, 2021 – 10 வழக்கு, 2022 – 7 வழக்கு, 2023 – 8 வழக்கு, 2024 – 7 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குகளில் கைதான பெரும்பாலானோர் சிறை தண்டனை பெற்றனர். இந்நிலையில், அரசு பணியாளர்கள் லஞ்சம் வாங்குவதை கைவிட்டு நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கவேண்டும் என மேல் அதிகாரி கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றன. கல்லூரி, அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது பிரிவினர் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாநில விளையாட்டுப் போட்டிக்கு குமரி மாவட்டத்தில் இருந்து 843 விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாநில போட்டி நாளை(அக்.,4) தேதி தொடங்குகிறது
துணை முதல்வராக உதய நிதி ஸ்டாலின் கடந்த வாரம் பதவி ஏற்றார். பத்மனாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோதங்கராஜ் இன்று(அக்.02) சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், துணை முதல்வரின் பணிகள் சிறக்க வாழ்த்து தெரிவித்ததோடு, கலைஞர் கருணாநிதி குறித்த நூலை பரிசாக மனோ தங்கராஜ் அவருக்கு வழங்கினர்.
குமரிக் கடல் மற்றும் உள் தமிழக பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.அதன்படி இரவு 10 மணி வரை குமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.