India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வன விலங்குகளை துன்புறுத்தும் நோக்கிலும், வேட்டையாடும் நோக்கிலும் வெடிபொருட்களை பயன்படுத்துவதும், வன விலங்குகளின் மீது சட்டவிரோத தாக்குதல்களில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வன விலங்குகள் மூலம் நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு தேவையான இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பித்து இழப்பீடு பெறலாம் என நேற்று மாவட்ட வன அதிகாரி பிரசாந்த் கூறினார்.
நாகர்கோவில் மாநகரில் 10 இடங்களில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க அரசின் அனுமதிக்கு பரிந்துரை செய்துள்ளதாக மாநகராட்சி மேயர் மகேஷ் நேற்று(அக்.,3) தெரிவித்தார். நாகர்கோவில் மாநகரில் வாகனங்கள் நிறுத்த இடவசதி இல்லாதவர்கள் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருவதாகவும், இதற்கு தீர்வு காணும் வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குமரி மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம், முதிர்கன்னிகள் உதவித்தொகை போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாதம்தோறும் மாற்றுத் திறனாளிகள் ரூ.1,500, மற்றவர்கள் ரூ.1,200 பெறுகின்றனர். அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 13,962, தோவாளையில் 6,844, கல்குளம் 14,925, விளவங்கோடு 17,228, திருவட்டார் 7,776, கிள்ளியூர் 14,367 என மொத்தம் 75,102 பேர் பயனடைந்து வருவதாக தகவல்.
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நெல்லை, குமரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மணலாலை மற்றும் தனியார் மணலாலைகள் மணல் எடுத்ததால் ஏற்பட்ட பாதிப்புகள், சுற்றுச்சூழல் சீர்கேடுகள் போன்றவைகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளார்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் வினாக்களில் ஆன்லைனில் பயிற்சித் தேர்வு நடந்து வருகிறது. நேற்று(அக்.,4) சமூக அறிவியல் தேர்வு நடந்தது. கூகுள் பார்ம் லிங்க் ஆசிரியர்கள் மூலமாக மாலை 6 மணிக்கு மாணவர்களுக்கு அனுப்பி ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டது. இன்று அறிவியல், நாளை கணித பாட தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுகளால் மாணவர்கள் முழு ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைய ஊக்கம் பெறுவர்.
காந்தி ஜெயந்தி நாளான அக்.,2 ஆம் தேதி நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் உட்பட உள்ள பகுதிகளில் உள்ள நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விடுமுறை தினமான அன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 36 கடைகள், 11 உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ குமார் நேற்று(அக்.,3) தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை காலங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளை வட்டாட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று உத்தரவு பிறப்பித்தார். மேலும் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பயிர்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று நீர்வள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அணைகளின் நீர் இருப்பை கண்காணித்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் டீனாக இருந்த பிரின்ஸ் ஸ்ரீகுமார் ஓய்வு பெற்றதை அடுத்து, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் கண் மருத்து பிரிவில் பேராசிரியையாக பணியாற்றிய ராமலெட்சுமி பதவி உயர்வு பெற்று ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரிக்கு டீனாக நியமிக்கப்பட்டார். இந்த உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் இன்று வெளியிட்டார்.
செண்பகராமன் புதூர் பகுதியில் இன்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்திமுருகன் (அகஸ்தீஸ்வரம்). ரவி(குளச்சல்) ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அதில் பிளாஸ்டிக் பொருட்கள் 3 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப் பட்டதுடன் 2 உணவகங்களுக்கு மொத்தம் ரூ.4000 அபராதம் விதிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் நடத்தப்படும் பெண்கள் தங்கும் விடுதிகள், கல்லூரி மாணவியர் விடுதிகள், மகளிர் விடுதிகள் அனைத்தும் உரிமம் பெற http://tnewp.com இணையதளத்தில் உடனே விண்ணப்பித்து நகலினை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அரசிடம் பதிவு மேற்கொள்ள விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று தெரிவித்தார். தவறினால் சட்டப்படி 2 ஆண்டு காலம் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.