Kanyakumari

News October 5, 2024

அன்னை சத்தியா நினைவு அரசு குழந்தைகள் காப்பகம்

image

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பில், அன்னை சத்தியா நினைவு அரசு குழந்தைகள் காப்பகமானது நாகர்கோவில் பறக்கின்கால், குழந்தைகள் நலன் & சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கி வருகிறது. ஆணையின் அடிப்படையில் குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு கல்வி, உணவு, உடை, தொழிற்பயிற்சிகள், மனமகிழ் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு எண் 04652 – 278980.

News October 5, 2024

போதைப் பொருள் விற்பனையா? உடனே இந்த நம்பர்ல சொல்லுங்க

image

போதைப்பொருட்கள் நடமாட்டம், போதை பள்ளி மாணவ, மாணவியர்கள், போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை பற்றிய தகவல்களை குழந்தை பாதுகாப்பு 1098, மாவட்ட எஸ்.பி. ஆபீஸ் 81229 30279, மாவட்ட காவல் கண்காணிப்பு வாட்ஸப்குழு 70103 63173, காவல் கண்காணிப்பாளர். 94981 88488 கலெக்டர் 94441 88000 ஆகிய எண்களுக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று கூறினார்.

News October 5, 2024

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி புதிய டீன் பதவியேற்பு

image

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த பிரின்ஸ் பயாஸ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய முதல்வராக ராமலட்சுமி நியமிக்கப்பட்டார். அவர் நேற்று(அக்.,4) பொறுப்பேற்றுக் கொண்டு செய்தியாளரை சந்தித்தார். அப்போது, மருத்துவக் கல்லூரிக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

News October 5, 2024

நாகர்கோவிலில் சிறப்பு தபால் தலை கண்காட்சி

image

தபால் துறையால் அக்.,7 முதல் 11 ஆம் தேதி வரை தேசிய தபால் வார விழா கொண்டாடப்படுகிறது. தபால் தலை சேகரிப்பு தினமான் 8 ஆம் தேதி அன்று மாணவ, மாணவிகளிடையே தபால் தலை சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாகர்கோவில் அரசு ஊழியர் சங்கக் கட்டடம், தக்கலை தபால் நிலையங்களில் சிறப்பு தபால் தலை கண்காட்சி, வினாடிவினா போட்டி, கருத்தரங்கு நடக்கிறது என குமரிகோட்ட தபால் துறை தெரிவித்துள்ளது. SHARE IT.

News October 5, 2024

மின் விபத்தா ? உடனே இந்த நம்பர்களுக்கு அழைக்கலாம்

image

மழை காலம் தொடங்கியுள்ள நிலையில், மழை & காற்றால் மின் கம்பிகள் அறுந்து தரையில் விழுந்து or தொங்கிக் கொண்டிருந்தால் அதனருகில் யாரும் செல்ல வேண்டாம். உடனடியாக உதவி செயற்பொறியாளர்கள் – 94458 54476, மக்கள் தொடர்பு அலுவலர் 94458 54477, மின் தடை அழைப்பு மையம் – 94458 59502 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்க வேண்டும் என குமரி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் நேற்று(அக்.,4) கூறியுள்ளார். SHARE IT.

News October 5, 2024

துணை முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த எம்பி விஜய் வசந்த்

image

தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் உதயநிதி ஸ்டாலினை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்தும் பெருந்தலைவர் காமராஜர் ஒரு சகாப்தம் என்ற புத்தகம் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் உட்பட பலர் உடனிருந்தனர்.

News October 5, 2024

இன்று பழங்குடியினருக்கான சிறப்பு குறை தீர் முகாம்

image

குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகு மீனா, இன்று(அக்.05) காலை 10 மணிக்கு, திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட தோட்டமலை அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெறும் பழங்குடியினருக்கான சிறப்பு குறை தீர்வு முகாமில் கலந்து கொள்கிறார் என நாகர்கோவில் செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

News October 4, 2024

இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களை இடிக்க ஆட்சியர் வேண்டுகோள்

image

குமரி மாவட்டத்தில் 2024-வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் நோக்கில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பழுதடைந்து இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள கட்டிடங்கள், நிறுவனங்கள் & வீடுகள் ஆகியவற்றை பருவமழையால் மாவட்டத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் பொருட்டு கட்டிடத்தின் உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து அப்புறப்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று கேட்டுக் கொண்டார்.

News October 4, 2024

கையெழுத்திட வந்த பிரபல ரவுடி கைது

image

குமரி மாவட்டத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த வாலி என்ற சுயம்புலிங்கத்தை இன்று(அக்.04) தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஈத்தாமொழி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த போது தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் உள்ள காவலர்கள் கைது செய்தனர்.

News October 4, 2024

பகவதி அம்மன் கோயில் பரிவேட்டை: ரூ.3 லட்சத்துக்கு ஏலம்

image

குமரி பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் திருவிழா வரும் 12-ந் தேதி அன்று சிகர நிகழ்ச்சியாக பரிவேட்டை திருவிழா நடக்கிறது. அன்று ஒரு நாள் மட்டும் நடக்கும் இந்த திருவிழா கடைகள் 3 லட்சத்து 900 ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த திருவிழா கடைகளை சுசீந்திரம் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் ஏலம் எடுத்துள்ளார்.

error: Content is protected !!