India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருவட்டாறு மற்றும் அடையாமடையில் தலா 13 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கல்லார் 11 மி.மீ, திருப்பதி சாரம் 8 மி.மீ, பேச்சிப்பாறை மி.மீ, பெருச்சாணி மி.மீ, திற்பரப்பு மி.மீ, மேல்புறம் தலா 4 மி.மீ, புத்தன் அணை, சுருளோடு கீழே கோதையார் தலா 3 மி.மீ, பாலமோர் மற்றும் ஆரல்வாய்மொழி பகுதிகளில் தலா 1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

குமரி: கிராமங்களில் உள்ள ஏழைபெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.3200 செலவில் 40 நாட்டுகோழி குஞ்சுகள் 50% மானியத்தில் வழங்கப்படுகிறது. ஒரு ஊராட்சியில் 100 பயனாளிகள் வீதம் 9 ஊராட்சிகளில் 900 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆட்சியர் ஒப்புதலோடு திட்டம் செயல்பட தயாராக உள்ளது என கால்நடை பராமரிப்புத்துறையினர் இன்று கூறினர்.

குமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி இன்று(டிச.19) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சமீபத்தில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு மீதான விவாதத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை கோரி பாராளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குமரியில் இம்மாதம் 30 மற்றும் 31ம் தேதிகளில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. முதலமைச்சர் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இதனையொட்டி இம்மாதம் 20 ம் தேதி முதல் ஜன., 2 ம் தேதி வரை குமரிக்கு வரும் வாகனங்களுக்கு குமரி zero பாய்ண்ட், விவேகானந்தபுரம், கோவளம் மற்றும் பிறபகுதிகளில் நுழைவு கட்டணம் வசூல் செய்யக்கூடாது என ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்துள்ளார்.

கொல்லங்கோடு வள்ளவிளையை சேர்ந்தவர் ஜெர்வின்(21). இவர் வீட்டின் அருகில் வசிக்கும் 10ம் வகுப்பு மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி, சிறுமியை தனியாக அழைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியிடம், தாயார் விசாரித்தபோது நடந்ததை கூறியுள்ளார். புகாரின் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் ஜெர்வின் மீது போக்சோ வழக்குப் பதிந்து ஜெர்வினை தேடுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் வினாடி-வினா போட்டி, பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை இம்மாதம் 23-ஆம் தேதி முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறுகின்றன. முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மேற்கு பகுதியில் இன்று(டிசம்பர் 19) அதிகாலை 2 மணி அளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. தகவலறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி, உயிரிழந்த இளைஞர் விபத்தில் சிக்கினார் அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதையொட்டி, ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் இன்று(டிச.,19) குமரி வருகின்றனர். விழா ஏற்பாடுகள் மற்றும் கண்ணாடி பாலம் அமைக்கும் பணிகளை பார்வையிடுகின்றனர்.

#இன்று(டிச.,18) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை முன்பு, மருத்துவரை நியமிக்க வலியுறுத்தி 22-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. #காலை 10 மணிக்கு நில அளவை அலுவலர்கள் களப்பணியாளர்களின் பணி சுமையை குறைக்க கேட்டு 6 வட்டாட்சியர் அலுவலகங்களில் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம். #காலை 10 மணிக்கு கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் முன்பு முறைகேடுகளை கண்டித்து CPIM சார்பில் ஆர்ப்பாட்டம்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் to குமரி இடையே சிறப்பு ரயில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிச.,24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து நள்ளிரவு 12.15-க்கு புறப்படும் ரயில் மதியம் 12.35 மணிக்கு குமரி சென்றடையும். அதேபோல் குமரியிலிருந்து டிச.,24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மாலை 3.35-க்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4.20-க்கு தாம்பரம் சென்றடையும்.
Sorry, no posts matched your criteria.