Kanyakumari

News October 7, 2024

சாமி குச்சி மலைப் பகுதியில் யானைகள் கூட்டம்

image

குமரி மாவட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, மான்கள், கடமான்கள், போன்ற பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. இவை சில நேரங்களில் மக்கள் வாழும் பகுதிக்குள் புகுந்து விடுகின்றன. இவைகளை விரட்ட வனத்துறையினர் அவ்வப்போது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்டம் சாமி குச்சி மலைப்பகுதியில் யானைகள் கூட்டமாக நிற்பது கண்டறியப்பட்டுள்ளது. வனத்துறையினர் இதனை கண்டறிந்துள்ளனர்.

News October 7, 2024

குமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை

image

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(அக்.,7) கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் வெளியில் செல்வோர் முன்னெசரிக்கையாக குடையுடன் செல்வது நல்லது.

News October 7, 2024

குமரி, நெல்லையில் நிலத்தடி நீர் உயர்வு: தகவல்

image

மாதந்தோறும் மாநில பொதுப்பணித் துறை(நிலத்தடி) சார்பில் தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி செப்., மாதம் எடுக்கப்பட்ட ஆய்வில் யாகுமரி, நெல்லை உட்பட 21 மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையின்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் நன்கு மழைபொழிந்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.

News October 7, 2024

சாலை விதி மீறிய 1,178 பேர் மீது வழக்கு

image

போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த 5-ம் தேதி நடந்த சோதனையில், போக்குவரத்து விதிகளை மீறியதாக நாகர்கோவில் சரகத்தில் 335, தக்கலையில் 291, குமரியில் 343, குளச்சலில் 209 பேர் என மொத்தம் 1,178 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விதிகள் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சுந்தர வானம் நேற்று கூறினார்.

News October 7, 2024

குமரி மாணவர்களுக்கு போட்டி: ரூ.5000, ரூ.3000, ரூ.2000 பரிசு!

image

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அண்ணா, பெரியார் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்குகான பேச்சுப்போட்டி நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் வரும் 15,16 தேதிகளில் நடைபெறுகிறது. மாவட்ட அளவில் நடக்கும் இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என 1, 2, 3 ஆம் பரிசுகள் வழங்கப்படும் என ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். SHARE IT.

News October 7, 2024

குமரி – மேட்டுப்பாளையம் ரயில் இயக்க கோரிக்கை

image

குமரியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி, மதுரை, பழனி, பொள்ளாச்சி, கோவை வழியாக தினசரி ரயிலை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். கன்னியாகுமரியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், மேட்டுப்பாளையத்திற்கு ரயில் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

News October 7, 2024

குமரி வரும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

image

ஆரல்வாய் மொழியில் வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று(அக்.,6) குமரி வருகை தருகிறார். மாலை வழக்கறிஞர்கள் வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் நாகர்கோவில் மாவட்ட பாஜக அலுவலகத்தில் சந்திப்பு நிகழ்ச்சியில் ஈடுபடுன்றனர். பின்னர் திங்கள் நகரில் உறுப்பினர் சேர்க்கையில் பங்கேற்கிறார் என மாவட்ட பாஜக தெரிவித்துள்ளது.

News October 6, 2024

குமரி அணைகளுக்கு நீர் வரத்து குறைந்தது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 272  கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 127  கன அடியும்   தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 548  பெருஞ்சாணி அணையில் இருந்து 160 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு வரும் நீரின்அளவு குறைந்துள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 424  பெருஞ்சாணி அணைக்கு 174 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

News October 6, 2024

மழை வெள்ளம் குறித்த விவரம் அறிய APP

image

குமரி கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையில் மழை வெள்ளம் குறித்த விபரங்களை எளிதில் முன்கூட்டியே பொதுமக்கள் தெரிந்து கொண்டு முன்னேற்பாடுகள் செய்யும் வகையில் தமிழக அரசினால் வடிவமைக்கப்பட்டுள்ள ‘தமிழகம் அலர்ட்’ (TN-ALERT) என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News October 6, 2024

குமரி பகவதி அம்மன் கோயில் நிலம் – ஐகோர்ட் உத்தரவு

image

குமரி பகவதி அம்மன் கோவில் சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்து கடை கட்டி சட்ட விரோதமாக பட்டா மாற்றம் செய்துள்ளனர். இதை ரத்து செய்ய வேண்டும் என சிவசிங் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நேற்று இதை விசாரித்த நீதிபதி, கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க வேண்டும். நிலத்துக்கு தனி நபர் பட்டா பெற்றிருந்தால் அதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

error: Content is protected !!