Kanyakumari

News October 8, 2024

குமரி பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம்

image

கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அண்மையில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, குமரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார். இன்று(அக்.,8) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

News October 8, 2024

ரயிலில் பட்டாசு எடுத்து வந்தால் 3 ஆண்டு ஜெயில்!

image

தீபாவளி பண்டிகை இந்த மாத இறுதியில் கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகள் தங்கள் வீட்டுக்கு பட்டாசு வாங்கிச் செல்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் ரயிலில் பட்டாசு கொண்டு செல்லும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். அவர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என நேற்று ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்

News October 8, 2024

ரூ.17 கோடியில் 96 பணிகள் பணிகள் நிறைவு: குமரி MP

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் மூலமாக 96 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2021-22 ஆண்டில் 17 பணிகள், 2022-232ல் 34 பணிகள், 2023-24ல் 48 பணிகள் முடிவடைந்துள்ளன. 2024-25ம் ஆண்டில் 11 பணிகள் நடந்து வருகின்றன. இத்தகவலை குமரி எம்.பி. விஜய் வசந்த் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News October 7, 2024

குமரியில் இருந்து காளி மலைக்கு ரத யாத்திரை

image

தென்னிந்தியாவின் புனித தளமான காளி மலை உச்சியில் துர்க்காஷ்டமி முன்னிட்டு, நாளை கன்னியாகுமரியில் இருந்து சமுத்திரகிரி ரத யாத்திரை நிகழ்ச்சி துவங்குகிறது. வரும் வெள்ளிக்கிழமை மலை உச்சியில் புனித ஊர்வலம் சென்றடைகிறது. இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள், பக்தர்கள் திரளாக பங்கேற்க குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் இன்று அறிக்கை விடுத்துள்ளார்.

News October 7, 2024

விசிக தலைவர் திருமாவளவன் நாகர்கோவில் வருகிறார்

image

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வருகிற 11ம் தேதி நாகர்கோவில் வருகிறார். அன்று நாகர்கோவிலில் நடைபெறும் இரட்சண்ய சேனை நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இன்று வேளச்சேரியில் திருமாவளவனை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசிய நிலையில், டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி நாகர்கோவில் மாநகர் விசிக மாநாடு நடத்தவும் அதில் திருமாவளவன் கலந்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

News October 7, 2024

மனித சங்கிலி போராட்டத்திற்கு தளவாய் சுந்தரம் அழைப்பு

image

குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான தளவாய் சுந்தரம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் சொத்து வரி, மின் கட்டண உயர்வு பத்திரப்பதிவுத்துறைய கட்டண உயர்வு போன்றவைகளை கண்டித்தும், போதை பொருள் விற்பனையை கண்டித்தும் நாளை மனித சங்கிலி போராட்டம் நாகர்கோவில் நடைபெற இருக்கிறது. இதற்கு அதிமுகவினர் திரண்டு வரவேண்டும்” என கேட்டுள்ளார்

News October 7, 2024

குமரி மாவட்ட ஊராட்சி கூட்டம் அறிவிப்பு

image

குமரி மாவட்ட ஊராட்சி சாதாரண கூட் டம் வரும் 18ம் தேதி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியரக வளாக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தென்னக ரயில்வே, சுகா தாரத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வரு வாய் துறை, கால்நடைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப் பட உள்ளன என மாவட்ட ஊராட்சி தலைவர் மெர்லியன்ட் தாஸ் இன்று அறிக்கை விடுத்துள்ளார்.

News October 7, 2024

பாஜக உறுப்பினர் சேர்க்கை மத்திய இணை அமைச்சர் பங்கேற்பு

image

கன்யாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி அழகிய நகர் பகுதி பொதுமக்களை பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களாக இணைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கலந்து கொண்டார். முன்னதாக மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் பாஜக நிர்வாகிகள் மத்திய இணை அமைச்சருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். இதைத் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

News October 7, 2024

குமரியில் தபால் நிலையம் வழியாக 50,000 பாஸ்போர்ட்!

image

நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் வழியாக பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இதுவரையிலும் இந்த சேவை மையம் வழியாக 50,000 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட தபால் நிலைய முதுநிலை கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரியில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

News October 7, 2024

கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 9715705825, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!