India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அஞ்சுகிராமம், ரஸ்தாகாடு கடற்கரை உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று கடலில் குளிப்பதற்காக கன்னங்குளம் பகுதியைச் சேர்ந்த 3 மாணவர்கள் சென்றுள்ளனர். இதில் கல்லூரி மாணவர் ஒருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். உடன் சென்ற 2 பள்ளி மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று IMD தெரிவித்துள்ளது. அந்தவகையில் தேனி, தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் உட்பட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வெளியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்ட Telecaller, Service Advisor பணி காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 10 ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 59 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்ட செய்தி குறிப்பில்,” குமரி மாவட்ட ஸ்டார் விளையாட்டு பயிற்சி மையத்தின் கீழ் தற்காப்பு கலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த விளையாட்டு பயிற்சி மையத்திற்கு தற்காப்பு கலை பயிற்றுநர் பதவிக்கு இம்மாதம் 20ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 25 ஆம் தேதி நேர்முகத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு நடைபெறும்” என்றுகூறியுள்ளார்.
காலை 11:30 மணி – ஆலங்கோட்டை சந்திப்பில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஆலங்கோட்டை சந்திப்பில் பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. எம்.ஆர் காந்தி எம்எல்ஏ கலந்து கொள்கிறார். மாலை 5 மணி – மத்திய அரசு தொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு ஜமாத் உலமா சபை சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு பொதுக்கூட்டம் நடக்கிறது.
குழித்துறை பகுதியில் பைஜு என்பவரின் உயர்ரக பைக் திருட்டு போனது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராகுல் சந்திரன் மற்றும் சுதீஷ் ஆகிய இருவரும் பைக்கை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை மார்த்தாண்டம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் சித்திரை தமிழ் புத்தாண்டு முன்னிட்டு வழக்கம்போல் 7000 லட்டுகள் விற்பனைக்கு உள்ளது எனவும் அன்று மதியம் அன்னதானமும் நடைபெறும் என நிர்வாகித்தனர் தெரிவித்தனர். சுப நிகழ்ச்சிகளுக்கு கோயில் மண்டபம் குறைந்த வாடகைக்கு கொடுக்கப்படும் என்று பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர். *ஷேர்
அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலம் கட்டுமானத்தின் பராமரிப்பு பணியை M/S ரைட்ஸ் நிறுவனம் (மத்திய பொதுத்துறை நிறுவனம்) அண்ணா பல்கலைக்கழகம், தூத்துக்குடி ஆகிய நிறுவனங்கள் 15.04.2025 முதல் 19.04.2025 வரை ஐந்து நாட்கள் ஆய்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாநிலங்களில் இருந்து அரிசி வந்து கொண்டிருக்கிறது. இன்று தெலுங்கானாவில் இருந்து 2,650 டன் அரிசி இன்று சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து அவை லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு பள்ளி விளையில் உள்ள மத்திய சேமிப்பு கிட்டங்கிக்கு கொண்டு சென்று இருப்பு வைக்கப்பட்டது.
அதிமுக மற்றும் பா.ஜ. கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி இயற்கையான கூட்டணி. பொதுமக்களிடையே பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டணி வரும் தேர்தலில் நிச்சயமாக மகத்தான வெற்றியைப் பெறும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெற்றி கூட்டணி அமைத்துள்ளார். தமிழகத்திற்கு அவரது வருகை வெற்றிக்கு அடையாளமாக உள்ளது என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி நேற்று கருத்து தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.