India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் இன்று ( 9ம் தேதி ) காலை கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் அவர், பின்னர் நாகர்கோவில் இரணியல் குழித்துறை நேரம் திருவனந்தபுரம் ஆகிய ரயில் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்கிறார். இந்த ரயில் நிலையங்களில் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக அமைச்சரவையில் அண்மையில் மாற்றம் செய்யப்பட்டு புதிய பொறுப்புக்கள் பல அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் புதிதாக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள அமைச்சர் கோவி.செழியனை இன்று கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
தமிழக நிதி மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை சென்னையில் தமிழக முன்னாள் அமைச்சரும் முன்னாள் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆன என் சுரேஷ் ராஜன் இன்று நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியில் (7 சதவீதம்) ரூ.20 லட்சம் வரை புதிய திட்டமான “கலைஞர் கடன் உதவி” திட்டத்தின் கீழ் நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்கப்படவுள்ளன. இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்துள்ளார்
கன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்தி மங்கலத்தில் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தை தொடங்கி வைத்த கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான தளவாய் சுந்தரம் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருச்சியில் பாஜக பொறுப்பு குழு தலைவர் எச். ராஜாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதில் அளித்த எச் ராஜா தளவாய் சுந்தரத்தை வரவேற்பதாக கூறினார்.
குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் விளக்கமளித்துள்ளார். அதன்படி, “என் மீது நடவடிக்கை எடுத்ததால் கவலையில்லை; தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் பேரணியை தொடங்கி வைத்தேன்; நீக்கப்பட்டு விட்டதால் ஓகே ரைட் என சொல்ல வேண்டியதுதான்; ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்ததால், அதிமுகவின் பலம் குறையும் என இபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்” எனதெரிவிதுள்ளார்
குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் செல்லச்சாமி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மார்த்தாண்டம் பாலம் அடிக்கடி பழுதடைந்து வருகிறது; இதனால் பாலத்தின் உறுதித் தன்மை, வேலையின் தன்மை உள்ளிட்டவைகள் குறித்து, உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்துவதுடன் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட அதிமுக செயலாளரும் அதிமுக அமைப்பு செயலாளருமாக இருந்த தளவாய் சுந்தரம் கட்சி பதவி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பச்சைமால் சென்னையில் முகமிட்டுள்ளார். அவர் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பச்சைமால் தலைமையில் குமரியில் ஒரு பிரிவினர் தனியாக அதிமுகவில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு தூத்துக்குடி மீனவர் அணி அமைப்பாளர் ரோட்டரி கோவும்,நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு தூத்துக்குடி மேற்கு மாவட்ட பொறியாளர் அணி ஆனந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு,குளச்சல் சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டுள்ளார். கட்சி கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால் அவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி அதிமுக தலைமை அறிவித்துள்ளது. குமரியில் ஆர்எஸ்எஸ் பேரணியை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.