Kanyakumari

News October 9, 2024

ஆதரவற்ற பெண்கள் உறுப்பினராக பதிவு செய்ய அழைப்பு

image

ஏழை, எளிய கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர்களுக்கு தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளிய முறையில் பெற <>https://www.tnwidowwelfareboard.tn.gov.in/ords/r/wswdwwb/wdwwb134/home<<>> என்ற தளம் மூலம் தங்களின் விவரங்களை பதிவு செய்து உறுப்பினராகலாம். இதில், பதிவு செய்பவர்கள் மட்டுமே அரசு உதவி பெற முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா இன்று கூறினார்.

News October 9, 2024

பாஜகவில் செல்வதாக வீண் வதந்திகள் ஆதரவாளர்கள் தகவல்.

image

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை குமரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் துவக்கி வைத்ததால் கட்சி பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா விடம் நேரடியாக பேசக்கூடியவர். எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவுகளில் தளவாய் சுந்தரம் பங்கு நிச்சயம் இருக்கும். இந்நிலையில், பாஜகவில் அவர் சேர்வதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரப்பப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News October 9, 2024

அக்.,12-ல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு ரத்து!

image

குமரி பகவதி அம்மன் கோயிலில் வரும் 12 ஆம் தேதி விஜயதசமியையொட்டி நடக்கும் தசரா விழாவில் சுற்றுலா பயணிகள் கலந்துகொள்வதற்கு வசதியாக, கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் அன்று பகல் 12 மணிக்கு மூடப்படுகிறது. இதைத் தொடர்ந்து அன்று12 மணி முதல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு ரத்துசெய்து செய்யப்படுகிறது. இந்த தகவலை விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீபத்மநாபன் தெரிவித்துள்ளார்.

News October 9, 2024

சென்னை விரைந்தார் MLA தளவாய் சுந்தரம்!

image

அதிமுக கட்சிப் பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் MLA நேற்று நீக்கப்பட்டார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இன்று(அக்.,9) கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையிலிருந்து தளவாய் சுந்தரம் MLA சென்னை புறப்பட்டு சென்றுள்ளார். சென்னையில் அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசுவார் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

News October 9, 2024

அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித் தொகை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று(அக்.,8) நாகர்கோவில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அளிக்குமாறு அவர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 9, 2024

கனரக வாகனங்களை தடை செய்ய கோரி மறியல் போராட்டம்!

image

விளை நிலங்களை வீட்டுமனைகளாக விற்பனை செய்வதை கண்டித்தும், புத்தேரி வழியாக கனிம வளங்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்களை தடை செய்யக் கோரியும், இது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்க கோரியும் வருகிற 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு புத்தேரியில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று குமரி மாவட்ட மீன் விவசாயிகள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் சகாயம் நேற்று(அக்.,8) தெரிவித்துள்ளார்.

News October 9, 2024

பேச்சிப்பாறை அணை கட்டியவருக்கு அஞ்சலி!

image

குமரி மாவட்ட மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய பேச்சுப்பாறை அணையை கட்டிய இங்கிலாந்து பொறியாளர் அலெக்சாண்டர் மிஞ்சின் 157 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பேச்சுப்பாறை அணையில் உள்ள அவரது கல்லறையில் குமரி மாவட்ட விவசாய சங்க சேர்மன் அட்வகேட் வின்ஸ் ஆன்றோ, தலைவர் புலவர் செல்லப்பா ஆகியோர் தலைமையில் விவசாயிகள் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

News October 9, 2024

குமரியில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று(அக்.,9) ஒரு சில இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக கீழகோதையாரில் 36 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கல்லார் பகுதியில் 32, அப்பர் கோதையார் 29, பாலமோர் 21.2, அடையாமடை 18.2, சுருளோடு 13.2, பெருஞ்சாணி 12.8, சிற்றாறு 12.4 குழித்துறை 12.4 மி.மீ மழை பெய்துள்ளது.

News October 9, 2024

தளவாய் சுந்தரம் பதவி பறிப்பு: நேரில் விளக்கம்?

image

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் MLA நேற்று(அக்.,8) நீக்கப்பட்டார். குமரி அருகே ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை அவர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தளவாய் சுந்தரம் விளக்கம் அளிக்க இருப்பதாக தகவல்.

News October 9, 2024

தென்னக ரயில்வே பொது மேலாளர் நாளை குமரி வருகை

image

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் இன்று ( 9ம் தேதி ) காலை கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் அவர், பின்னர் நாகர்கோவில் இரணியல் குழித்துறை நேரம் திருவனந்தபுரம் ஆகிய ரயில் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்கிறார். இந்த ரயில் நிலையங்களில் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

error: Content is protected !!