India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுவிலக்கு காவல் துறை மாவட்டத்தில் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளது. அதில் கள்ளச்சாராயம் காச்சுபவர்கள், விற்பனை செய்பவர்கள், போலி மது விற்பனை செய்பவர்கள், கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து 8122930279 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு தகவல் கொடுக்கும்படியும், தகவல் கொடுப்பவர்கள் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் நாளை காலை 11 மணிக்கு கக்கோட்டு தலையில் சமூக நலக்கூடத்தையும், 11.30 மணிக்கு கண்ணோட்டில் அங்கன்வாடி மையத்தையும், 1.30 மணிக்கு கடியப்பட்டணத்தில் சமபந்தி விருந்தையும் துவக்கி வைக்கிறார். தொடர்ந்து, மாலை 4:30 மணிக்கு மார்த்தாண்டம் மாணவர் காங்கிரஸ் கூட்டத்திலும், இரவு ஏழு மணிக்கு ஐரேனிபுரம் சமூக நலக் கூட நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் விஜயதசமியான இன்று(அக்.,12) காலை வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோயில் மேல் சாந்திகள் விட்டால் போற்றி, சீனிவாசன் போற்றி, ஆகியோர் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடத்தினார். இதில் ஏராளமான குழந்தைகளுக்கு ஏடு தொடங்கப்பட்டது. ஒரு தட்டில் பச்சரிசி வைத்து ‘அ,ஆ..’ எழுதி ஏடு தொடங்கினார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 917 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 637 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 551 கன அடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 160 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 537 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 285 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணுசக்தி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போலீஸ் அதிகாரியை கொல்ல முயன்றனர், அவரது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை பறித்து சென்றனர் என பொய் வழக்குகள் போட்டு அலைக்கழிக்கின்றனர். வாழ்வுரிமைக்காகவும், வாழ்வாதார உரிமைகளுக்காகவும் போராடிய மக்கள் மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்குகளை திரும்பப்பெற அரசுகளுக்கு திராணி இல்லை என கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று(அக்.,12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மழையால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன் பாதுகாப்புடன் செல்வது நல்லது. SHARE IT.
சுற்றுலா மயமான கன்னியாகுமரியில் குமரி சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நேற்று(அக்.,11) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, வன அலுவலர் பிரசாந்த் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகள் நடத்திய கலைஞர்களை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா விழாவில் கௌரவித்தார்.
குமரி மாவட்டத்தில் ரப்பர், முந்திரி தோட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களுக்கு ESI மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக காவல்கிணறு நாகர்கோவில் நான்கு வழிச்சாலை, குமாரபுரம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு நடவடிக்கைகள் தொடர்ந்துள்ளது. இந்நிலையில், இந்நடவடிக்கைக்காக கலெக்டருக்கு ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் நன்றி தெரிவித்துள்ளார்.
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை(ஆரஞ்ச் அலெர்ட்) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியே செல்லும் மக்கள் முன் பாதுகாப்புடன் செல்வது நல்லது. SHARE IT.
நாகர்கோவிலில் இன்று(அக்.,11) நடைபெறும் இரட்சண்ய சேனை விழாவில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முரசொலி செல்வம் மறைவை தொடர்ந்து அங்கு செல்வதால் நாகர்கோவில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
Sorry, no posts matched your criteria.