Kanyakumari

News October 11, 2024

குமரி அணைகளுக்கு நீர் வரத்து குறைந்தது

image

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 537 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 285 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையிலிருந்து 547 கன அடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 160 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 1132 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 294 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

News October 11, 2024

பகவதி அம்மன் கோயில் கிழக்கு வாசல் திறப்பு

image

குமரி பகவதி அம்மன் கோயிலில், வருடத்தில் 5 நாள் மட்டுமே திறக்கப்படும் கிழக்கு வாசல் திறக்கும் நிகழ்ச்சி நாளை(அக்.,12) நடக்கிறது. பகவதி அம்மன் கோயில் பாரிவேட்டை திருவிழா நடந்து வருவதை தொடர்ந்து நாளை வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் பவனி நடக்கிறது. மதியம் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு விழா நடக்கிறது. தொடர்ந்து, கிழக்கு வாசல் வழியாக அம்மன் கோயிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

News October 11, 2024

குமரியில் 1619 பேருக்கு கண் அறுவை சிகிச்சை: GH டீன்

image

ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2023 ஆம் ஆண்டு கண் சிகிச்சைக்காக 31,000 பேர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்றனர். 2024 ஜனவரி முதல் செப்., வரை கண் தொடர்பாக 23,124 பேர் சிகிச்சைபெற்றனர். கடந்த ஆண்டு 1619, இந்த ஆண்டு 1207 பேருக்கும் கண் அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக நேற்று நடந்த கண்பார்வை தின நிகழ்ச்சியில் கல்லூரி டீன் ராமலெஷ்மி கூறினார்.

News October 11, 2024

இரு மாநில உள்ளாட்சி பிரதிநிதிகள் பயிற்சி முகாம்: ஆலோசனை

image

தமிழ்நாடு மற்றும் கேரள மாநில பா.ஜ.க உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு, பயிற்சி முகாம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று(அக்.,10) அகில பாரத பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க சார்பாக கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சிவக்குமார் மற்றும் பிறமொழிப் பிரிவு மாநிலத் தலைவர் ஜெயக்குமார் கலந்து கொண்டு கருத்துகளை எடுத்துக் கூறினர்.

News October 11, 2024

ஆதரவற்ற பெண்களுக்கு கோழிக்குஞ்சுகள்: குமரி கலெக்டர்

image

கிராமப்புறங்களில் உள்ள ஏழை பெண்கள் விதவைகள் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 4 வாரங்கள் உடைய 40 நாட்டுக் கோழிக்குஞ்சுகள் 50% மானியத்தில் வழங்கும் திட்டம் யாகுமரி மாவட்டத்தில் 900 அலகுகள் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் ஒரு பயனாளிக்கு 4 வாரமுடைய 40 நாட்டுக்கோழிக்குஞ்சுகள் 50% மானியத்தில் ரூ.1600/- செலவில் வழங்கப்படும் என கலெக்டர் அழகு மீனா நேற்று கூறினார்.

News October 11, 2024

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி அறிவுறுத்தல்!

image

குமரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் கூறியதாவது, பொது இடங்களில் ஆயுத பூஜைக்காக அமைக்கப்படும் பந்தல்களில் அனுமதியின்றி மின் இணைப்பை நீட்டித்து எடுக்கக்கூடாது; பழுதடைந்த வயர்களை தவிர்த்து தரமானவற்றை பயன்படுத்தி அலங்கார விளக்குகள் அமைக்க வேண்டும்; குழந்தைகள் தொடமுடியாத இடத்தில் அலங்கார விளக்குகளை அமைக்க வேண்டும் என பாதுகாப்புடன் ஆயுத பூஜை கொண்டாட கேட்டுக்கொண்டுள்ளார். SHARE IT.

News October 11, 2024

மணப்பெண் கோலத்தில் பகவதி அம்மன்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் ஒன்றான அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் கடந்த அக்.,3 அன்று நவராத்திரி விழா தொடங்கியது. தொடர்ந்து, நவராத்திரி விழாவின் 8 ஆம் நாளான நேற்று(அக்.,10) பகவதி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் மணப்பெண் கோலத்தில் எழுந்தருளி திருக்கயிலை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News October 10, 2024

தளவாய் சுந்தரத்துக்கு ஆதரவாக அதிமுக சுவரொட்டிகள்

image

குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கழக அமைப்புச் செயலாளருமான தளவாய் சுந்தரம் அந்த பொறுப்புகளில் இருந்து நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் தளவாய் சுந்தரத்திற்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவினர் சுவரொட்டிகள் இன்று வெளியிட்டுள்ளனர். அதில் எடப்பாடியார் மற்றும் தளவாய் சுந்தரம் வழியில் செயல்படுவோம் என குறிப்பிட்டுள்ளனர்.

News October 10, 2024

குமரி மாவட்ட சுகாதார துணை இயக்குநர் நியமனம்

image

குமரி மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனராக இருந்த மீனாட்சி இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனராக (முழு பொறுப்பு )டாக்டர் பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார். இவர் கும்பகோணம் யானைக்கால் நோய் தடுப்பு திட்ட அதிகாரியாக தற்போது பணியாற்றி வருகிறார். அவர் இன்னும் ஒரு சில தினங்களில் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News October 10, 2024

அகில இந்திய முற்போக்கு பெண்கள் ஆட்சியரிடம் மனு

image

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட சிங்கன்காவு பகுதியில் குடியிருப்பு பகுதியில் விதிமுறைகளை பின்பற்றாமல், பேக்கரி பண்டங்கள் உற்பத்தி செய்யும் நோக்கில் பேக்கரி துவங்குவதற்கான பணிகள் நடைபெறுகிறது. அரசு அனுமதி பெறாமல் நடைபெறும் இந்த பேக்கரியால் சுகாதார கேடு ஏற்பட வாய்புள்ளது. எனவே இந்த பேக்கரிக்கு தடை விதிக்க கோரி சி பி ஐ எம் எல் அகில இந்திய முற்போக்கு பெண்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

error: Content is protected !!