Kanyakumari

News October 13, 2024

கஞ்சாவுடன் சுற்றி திரிந்த 4 பேர் கைது

image

வடசேரி போலீசார் அருகுவிளை பகுதியில் நேற்று ரவுண்டு பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற நான்கு வாலிபர்களை போலீசார் சோதனை செய்த போது, அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களது வங்கி கணக்கையும் போலீசார் முடக்கி உள்ளனர்.

News October 13, 2024

விவேகானந்தர் மண்டபத்துக்கு எத்தனை பேர் பயணம்?

image

குமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி கடந்த 3 நாட்களில் 23527 பேர் படகில் பயணம் செய்து பார்வையிட்டு வந்துள்ளனர். விவேகானந்தா பொதிகை குகன் ஆகிய 3 படகுகள் மூலம் 11-ந்தேதி 7642 பேரும் 12 ந் தேதி 5885 பேரும் இன்று இதுவரை 8ஆயிரம் பேரும் படகில் பயணம் செய்துள்ளனர்.

News October 13, 2024

குளச்சல் அருகே சிறுமியை கர்பமாக்கிய சிறுவன் கைது

image

குளச்சல் பகுதியில் சேர்ந்த 17 வயது சிறுமி; மாணவன் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்திலும் சிறுமியுடன் இணைக்கமாக இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமி தற்போது கர்ப்பமாக இருப்பதை தொடர்ந்து குளச்சல் போலீசார் சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News October 13, 2024

குமரி: புதைக்குழியில் சிக்கி உயிரிழந்த மாணவன்

image

கொல்லங்கோடு அருகே மஞ்சத்தோப்பு காலனியை சேர்ந்தவர் ஜெஸ்லியன் மகன் பிரிட்டில்ராய்(16) .11ம் வகுப்பு மாணவர். அக்.11.ம் தேதி மாலை நண்பர்களுடன் இவர் பூவார் பொழிக்கரை பகுதியில் குளித்துக்கொண்டிருந்தபோது ஆற்றில் மணல் புதைக்குழியில் சிக்கி இறந்து போனார். சம்பவ இடம் சென்ற பொழியூர் போலீசார் பிரிட்டில்ராய் உடலை  மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை நடத்தினர்.

 

News October 13, 2024

அமைச்சர் தங்கம் தென்னரசு நாகர்கோவில் வருகை

image

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் நாகர்கோவில் வருகிறார். அவருக்கு நாகர்கோவிலில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அவர் மாவட்ட திமுக அலுவலகத்தில் கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார்” என தெரிவித்துள்ளார்.

News October 12, 2024

கள்ளச்சாராயம் காச்சபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுவிலக்கு காவல் துறை மாவட்டத்தில் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளது. அதில் கள்ளச்சாராயம் காச்சுபவர்கள், விற்பனை செய்பவர்கள், போலி மது விற்பனை செய்பவர்கள், கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து 8122930279 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு தகவல் கொடுக்கும்படியும், தகவல் கொடுப்பவர்கள் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

News October 12, 2024

கக்கோட்டுத்தலையில் நாளை சமூக நலக்கூடம் திறப்பு

image

குமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் நாளை காலை 11 மணிக்கு கக்கோட்டு தலையில் சமூக நலக்கூடத்தையும், 11.30 மணிக்கு கண்ணோட்டில் அங்கன்வாடி மையத்தையும், 1.30 மணிக்கு கடியப்பட்டணத்தில் சமபந்தி விருந்தையும் துவக்கி வைக்கிறார். தொடர்ந்து, மாலை 4:30 மணிக்கு மார்த்தாண்டம் மாணவர் காங்கிரஸ் கூட்டத்திலும், இரவு ஏழு மணிக்கு ஐரேனிபுரம் சமூக நலக் கூட நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

News October 12, 2024

குமரி பகவதி அம்மன் கோயிலில் வித்யாரம்பம்

image

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் விஜயதசமியான இன்று(அக்.,12) காலை வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோயில் மேல் சாந்திகள் விட்டால் போற்றி, சீனிவாசன் போற்றி, ஆகியோர் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடத்தினார். இதில் ஏராளமான குழந்தைகளுக்கு ஏடு தொடங்கப்பட்டது. ஒரு தட்டில் பச்சரிசி வைத்து ‘அ,ஆ..’ எழுதி ஏடு தொடங்கினார்கள்.

News October 12, 2024

குமரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 917 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 637 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 551 கன அடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 160 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 537 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 285 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

News October 12, 2024

பொய் வழக்கு போட்டு அலைக்கழிப்பு: உதயகுமார்

image

அணுசக்தி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போலீஸ் அதிகாரியை கொல்ல முயன்றனர், அவரது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை பறித்து சென்றனர் என பொய் வழக்குகள் போட்டு அலைக்கழிக்கின்றனர். வாழ்வுரிமைக்காகவும், வாழ்வாதார உரிமைகளுக்காகவும் போராடிய மக்கள் மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்குகளை திரும்பப்பெற அரசுகளுக்கு திராணி இல்லை என கூறியுள்ளார்.

error: Content is protected !!