Kanyakumari

News October 15, 2024

நாகர்கோவிலில் அக்.,17-ல் கைப்பந்து வீரர்கள் தேர்வு

image

குமரி மாவட்ட கைப்பந்து கழகம் நடத்தும் மாவட்ட அளவிலான இளைய வர் பிரிவு ஆண், பெண் கைப்பந்து வீரர்கள் தேர்வு அக்.,17ஆம் தேதி மாலை 3 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது. 1.1.2002-க்குப் பின் பிறந்தவர்கள் கலந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அக்.,26 to 31 வரை பயிற்சி உண்டு. வேலூரில் நவ.,2 to 5 வரை நடக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கலாம் என கைப்பந்து கழகத்தினர் கூறினர்.

News October 14, 2024

குமரியில் மழை அவசரகால எண்கள் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பொது மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 1077, 231077, 9384056205 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

News October 14, 2024

கன்னியாகுமரியில் இரண்டு நாட்கள் ரெட் அலர்ட்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளையும் நாளை மறுநாளும் (15 மற்றும் 16) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்கள் கன்னியாகுமரி உட்பட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும், 20 சென்டிமீட்டர் மழை பெய் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே கடலோரப் பகுதி மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News October 14, 2024

நாகர்கோவில் முழுமை திட்டம்: ஆட்சியர் அறிவிப்பு

image

நாகர்கோவில் முழுமை திட்டம் தொடர்பாக விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் இருந்தால் அதனை உறுப்பினர் செயலர், உதவி இயக்குநர், நாகர்கோவில் உள்ளூர் திட்ட குழுமம், மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் என்ற முகவரிக்கு மின்னஞ்சலிலோ அல்லது நேரிலோ எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று(அக்.,13) தெரிவித்துள்ளார்.

News October 14, 2024

தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு சான்றிதழ்

image

குமரி மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தொடங்கப்படும் அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும் சிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் கணக்கு தொடங்கிய அஞ்சலங்களில் இந்த சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

News October 14, 2024

நாகர்கோவில் வருகை தரும் வணிகர் சங்க புதிய தலைவர்

image

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை புதிய மாநில தலைவர் சௌந்தரராஜன், பொதுச் செயலாளர் நியூ ராயல் பீர்முகமது ஆகியோர் நாளை(அக்.,15) மாலை 5 மணி அளவில் நாகர்கோவில் அப்பா மார்க்கெட் அரங்கில் நடைபெறும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்த தகவலை கன்னியாகுமரி மாவட்ட வணிகர் பேரவை பாதுகாவலர் டேவிட்சன் நேற்று தெரிவித்தார்.

News October 14, 2024

வடகிழக்கு பருவமழை: ‘1077’-க்கு புகார் தெரிவிக்கலாம்

image

வடகிழக்கு பருவ மழையை எதிர்நோக்கி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்க மாவட்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண் ‘1077’ தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ள சேதங்கள், பாதிப்புகள் போன்றவை குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு புகார் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News October 13, 2024

மாவட்டம் முழுவதும் பெண் உட்பட 14 பேர் கைது

image

குமரி மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெட்டிக்கடைகள் மளிகை கடைகள் ஆகியவற்றில் நேற்று ஒரே நாளில் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக பெண் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

News October 13, 2024

தலைமை ஆசிரியர் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு

image

தமிழகம் முழுவதும் 45 தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனை ஒட்டிய பணியிடங்களில் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அந்தவகையில் பளுகல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஸ்டல் டாய்லெட் பதவி உயர்வு பெற்று நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவை பள்ளிக்கல்வி இயக்குனர் இன்று பிறப்பித்துள்ளார்.

News October 13, 2024

அறிக்கை வெளியிட்டுள்ள குமரி எம்.பி

image

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “கன்னியாகுமரி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் இருந்து வருகிறது; இதனைத் தொடர்ந்து அதனை சீரமைக்க 14 கோடியே 87 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது; பணிகள் விரைவில் தொடங்கும்” என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!