Kanyakumari

News October 15, 2024

ரயிலில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ கஞ்சா பறிமுதல்

image

புனேயில் இருந்து நேற்று நாகர்கோவில் வந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் நடத்திய சோதனையில் முன்பதிவு இல்லாத ஒரு பெட்டியின் இருக்கைக்கு கீழ் பேக் கேட்பாரற்று கிடந்தது. இதனை போலீசார் திறந்து பார்த்தபோது 7 பொட்டலங்களில் 4 கிலோ அளவுக்கு கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வரப்பட்ட கஞ்சா குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 15, 2024

நான்கு மாவட்ட எஸ்பிக்களுடன் டிஐஜி ஆலோசனை

image

சட்ட ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக நெல்லை சரக டிஐஜி 4 மாவட்ட எஸ்.பிகளுடன் ஆலோசனை நடத்தினார். திருநெல்வேலி காவல் சரகத்தின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் டிஐஜி மூர்த்தி தலைமையில் நடந்தது. அதில் திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி.,க்கள் நேரடியாக கலந்து கொண்டதாக இன்று நாகர்கோவில் எஸ் பி அலுவலக செய்தி குரூப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 15, 2024

குமரி தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பேட்டி

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 260 தென்னை விவசாயிகள் 350 ஏக்கர் இன்சூரன்ஸ் செய்து உள்ளதாக மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பீபி ஜான் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறினார். தொடர்ந்து, மாவட்டத்தில் நெல் விவசாயிகள் இன்சூரன்ஸ் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை என்றும், இழப்பீடு மிக குறைவாக கிடைப்பதால் அவர்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிவித்தார்.

News October 15, 2024

குமரி மாவட்டத்திற்கு கள்ளக்கடல் எச்சரிக்கை

image

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 16 ஆம் தேதி நள்ளிரவு வரை பல அடி உயரத்திற்கு கடல் அலைகள் கொந்தளிக்கும் என்று இந்திய கடல் சார் தகவல் மையம் அறிவுறுத்தியுள்ளது.

News October 15, 2024

மீனவர்கள் கைதற்கு அதிமுக மீனவர் அணி கண்டனம்

image

தமிழக மீனவர்கள் 21 பேரை சிங்கள கடற்படையினர் கடந்த ஒன்பதாம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களின் நான்கு விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையால் கடந்த 4 மாதத்தில் 425 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு 196 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் மெத்தனம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க அதிமுக மீனவர் அணி மாநில இணை செயலாளர் பசிலியான் இன்று அறிக்கை விடுத்துள்ளார்.

News October 15, 2024

குமரியில் 30 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன் ஏற்பாடுகளையொட்டி காய்ச்சல் பாதிப்புகளை தடுக்கும் வகையில் 30 இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் இன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. முன்சிறை முட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. மருத்துவர்கள் முகாமுக்கு வந்தவர்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு மருந்துகளை கொடுத்தனர்.

News October 15, 2024

தாம்பரம் அஞ்யோதயா ரயில் நாகர்கோவில் செல்லாது

image

தாம்பரம் – நாகர்கோவில் அஞ்யோதயா ரயில் இம்மாதம் அக்.22ம் தேதி வள்ளியூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். வள்ளியூரில் இருந்து நாகர்கோவில் செல்வது தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. அதைப்போன்று நாகர்கோவில் – தாம்பரம் அந்தயோதயா 23ம் தேதி வள்ளியூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் என ரயில்வே நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 15, 2024

குமரி மலையோரப் பகுதிகளில் மழை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தடிக்காரன் கோணத்தில் 20.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கல்லாறு எஸ்டேட்டில் 10 பெருஞ்சாணி 8.4, பாலமோர் 6.2, சுருளோடு 5, புத்தன் அணை 5, சிற்றாறு 2.4, களியல் 2.2, அப்பர் கோதையாறு 2, முக்கடல் அணை 2, லோயர் கோதையார் 1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

News October 15, 2024

நாகர்கோவிலில் அக்.,17-ல் கைப்பந்து வீரர்கள் தேர்வு

image

குமரி மாவட்ட கைப்பந்து கழகம் நடத்தும் மாவட்ட அளவிலான இளைய வர் பிரிவு ஆண், பெண் கைப்பந்து வீரர்கள் தேர்வு அக்.,17ஆம் தேதி மாலை 3 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது. 1.1.2002-க்குப் பின் பிறந்தவர்கள் கலந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அக்.,26 to 31 வரை பயிற்சி உண்டு. வேலூரில் நவ.,2 to 5 வரை நடக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கலாம் என கைப்பந்து கழகத்தினர் கூறினர்.

News October 14, 2024

குமரியில் மழை அவசரகால எண்கள் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பொது மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 1077, 231077, 9384056205 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

error: Content is protected !!