Kanyakumari

News October 17, 2024

குமரி மாவட்ட மழை நிலவரம் அறிவிப்பு

image

குமரி மாவட்டத்தில் பரவலாக மலையோர பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதன்படி, சுருளோட்டில் 29.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பாலமோரில் 22.4, கல்லாரில் 20, தடிக்காரன் கோணம் 19.6, பூதப்பாண்டி 15.2, பெருஞ்சாணி 11, புத்தன் அணை 9.6, செண்பகராமன் புதூர் 8.4, முக்கடல் அணை 8.4, கோதையாிரல் 8 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது இது தவிர அடையாமடை, பேச்சிப்பாறை, ஆரல்வாய்மொழி, தோவாளை உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்துள்ளது.

News October 16, 2024

அதிமுக மீனவரணி இணை செயலாளர் அறிக்கை

image

அதிமுக மீனவரணி இணை செயலாளர் பசலியா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் தாது மணல் எடுக்க கருத்து கேட்பு கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது; அதனை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்; மீனவர் விரோதத் திட்டங்களை தமிழக அரசு அனுமதித்தால் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்” என குறிப்பிட்டுள்ளார். 

News October 16, 2024

குமரி கடலில் இறங்கிய சுற்றுலா பயணிகளை விரட்டிய போலீஸ்

image

குமரி மாவட்ட கடல் பகுதியில் சீற்றம் அதிகமாக உள்ளதால் குமரிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளை கடலில் இறங்க போலீசார் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் ஒரு சில சுற்றுலாப் பயணிகள் போலீஸ் காவலையும் மீறி கடலில் இறங்கியநிலையில் அவர்களை போலீசார் அங்கிருந்து விரட்டி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News October 16, 2024

குமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க திடீர் தடை

image

குமரி கடலில் இன்று(அக்.,16) காலை கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக கரையை நோக்கி வந்து வீசிவிட்டு சென்றன. இந்த ராட்சத அலையினால் கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா போலீசார் கடற்கரை பகுதியை சுற்றி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

News October 16, 2024

தீபாவளி: சென்னை to நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் to நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் விருதாச்சலம், திருச்சி, மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக நாகர்கோவில் வந்து சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து இதே வழியில் சென்னை சென்ட்ரலுக்கு ரயில் புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2024

குமரி அணைகளுக்கு குறைந்த நீர்வரத்து

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 505 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 267 கன அடியும்   தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 551, பெருஞ்சாணி அணையில் இருந்து 160 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 564, பெருஞ்சாணி அணைக்கு 285  கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

News October 16, 2024

தீபாவளி: குமரியில் to மைசூருக்கு சிறப்பு ரயில்!

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து மைசூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல் சேலம் ஜோலார்பேட்டை பெங்களூர் வழியாக இந்த ரயில் இயக்கப்பட இருக்கிறது. நாகர்கோவிலில் இருந்து நவ.,2ஆம் தேதியும் மைசூரில் இருந்து நவ.,3ம் தேதியும் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது

News October 16, 2024

குமரி கடற்கரையில் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

image

வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசு கண்காணிப்பு அதிகாரி ஹனீஷ் சாப்ரா நேற்று இரவு கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா மற்றும் அதிகாரிகளும் சென்றனர். அவர்களிடம் அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். பாதிப்பை தடுக்க அறிவுரைகளும் வழங்கினார்.

News October 16, 2024

குமரி அருகே ஊருக்குள் புகுந்த கடல் நீர்

image

குமரி அழிக்கால் கடலில் இன்று நள்ளிரவு பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. ஆக்ரோஷமாக சீறிய அலைகள் தண்ணீருடன் மணலையும் சுருட்டியபடி கடற்கரையொட்டி உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்துவெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். மேடான பகுதிகளிலும், வீட்டு மாடியிலும் தஞ்சம் அடைந்தனர். தொடர்ந்து கடல்நீர் வீடுகளுக்குள் புகுந்து விடாமல் மணல் மூடைகளை அடுக்கி வைத்துள்ளனர்.

News October 15, 2024

கீரிப்பாறையில் சிறுத்தை நடமாட்டம் இல்லை

image

குமரி மாவட்டம் கீரிப்பாறை லேபர் காலணி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் அப்பகுதியில் ஒரு ஆட்டை சிறுத்தை இழுத்து சென்று விட்டதாகவும் தகவல் பரவியது. விசாரணையில், இந்த தகவல் முற்றிலும் தவறு என்றும் தாங்கள் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டதில் சிறுத்தை நடமாட்டம் இல்லை எனவும், ஆகவே கீரிப்பாறை சுற்று வட்டார மக்கள் சிறுத்தை குறித்து பீதி அடைய வேண்டாம் என குமரி மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!