Kanyakumari

News November 3, 2024

நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சி

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா (இ.ஆ.ப) அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் புத்தளம் பேரூராட்சி சொத்தவிளை பீச் முதல் பள்ளம் துறை வரை ‘நடப்போம் நலம் பெறுவோம்’ நிகழ்ச்சி இன்று (நவ-3) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புத்தளம் பேரூராட்சி துணைத்தலைவர் பால்தங்கம் மற்றும் கவுன்சிலர்கள் ஜெகநாதன் மற்றும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

News November 3, 2024

குமரியில் மகன் – தாய் – மகன்; அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்

image

வில்லுக்குறி வீரவிளை சுரேஷ்குமார் – வசந்தாவின் இளைய மகன் சுதன்(18) ஜூலை.31ஆம் தேதி கல்லூரியில் மயங்கி விழுந்து இறந்தார். வேதனையில் இருந்த வசந்தா செப்.27ம் தேதி மயங்கி விழுந்து இறந்தார். மூத்த மகன் சுமன் (19) நேற்று(நவ.2) காலை வீட்டில் மயங்கி விழ, ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்துபோனார். நேசமணிநகர் போலீஸ் விசாரணை. ஒரே வீட்டில் 4 மாதங்களில் தாய் – மகன்கள் இறந்தது அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

News November 3, 2024

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்த நிலையில் இன்று(நவ.3) காலை கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலையோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

News November 2, 2024

தேவையான பொருட்களை இருப்பு வைக்க ஆட்சியர் உத்தரவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கன மழை பெய்தது மழையின் காரணமாக மாவட்டத்தில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த நிலையில் மழை தொடர்ந்து பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிக முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. தற்காலிக முகாம்களுக்கு தேவையான அனைத்து உணவு பொருட்கள் மற்றும் இதர பொருட்களை கொள்முதல் செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளும்படி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News November 2, 2024

பிரியங்கா காந்திக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் விஜய் வசந்த் 

image

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் இன்று வயநாடு புறப்பட்டுச் சென்றார். அவர் அங்கு தங்கியிருந்து காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று மேற்கு மாவட்ட காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 2, 2024

ஜீஸ்ல் மயக்கம் மருந்து கொடுத்து 20 சவரன் கொள்ளை

image

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் நிலையம் அருகே நல்லூரில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (60) வயதான மூதாட்டியிடம் நலவாரியத்தில் பதிவு செய்வதாக கூறி ஆரஞ்சு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து வயதான மூதாட்டி இடம் 20 சவரன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர். சம்பவ இடத்திற்கு சென்று ஆறு மணி போலீசார் இன்று(நவ.2) விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 2, 2024

குமரியில் தீபாவளிக்கு ரூ.9.50 கோடிக்கு மது விற்பனை

image

தீபாவளியையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் உள்ள 91 டாஸ்மாக் கடைகளில் கடந்த 30, 31ம் தேதிகளில் மொத்தம் ₹9.50 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக நாள் ஒன்றுக்கு சராசரியாக ₹3 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 1, 2024

குமரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்

image

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இன்று (நவ.01) கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 1, 2024

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், தொகுதி முகவரி மாற்றம், ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்தல் போன்றவைகளுக்கான சிறப்பு முகாம் இம்மாதம் 16, 17, 23 மற்றும் 24 தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று (அக்.31) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News November 1, 2024

நாகர்கோவில் – ஈரோடு இடையே சிறப்பு பேருந்து

image

தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பாக நாகர்கோவிலில் இருந்து ஈரோட்டுக்கு மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக சிறப்பு பேருந்து 3ஆம் தேதி அன்று இரவு 7 மற்றும் 8 மணிக்கு இரண்டு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அரசு போக்குவரத்து கழகம் நேற்று (அக்.31) தெரிவித்துள்ளது.