India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. ஆகவே கடற்கரை பகுதிகளில் கடலில் 200 நாட்டிக்கல் மைல் தூரம் தாண்டி மீன்பிடிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் கடல்சார் அதிகாரிகளுக்கும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா அறிவுறுத்தி உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருப்பதாக புகார்கள் கூறப்பட்ட நிலையில் இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற ஆய்வில் மாவட்டத்தில் 101 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் அமைச்சரும் பத்மநாபபுரம் MLA மனோ தங்கராஜ் இன்று(அக்.18) வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடியது குறித்து கூறியிருப்பதாவது தூர்தர்சன் ஆளுநரிடம் மன்னிப்பு கேட்பது வேடிக்கை!தூர்தர்ஷனும் ஆளுநரும் சேர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டியது புண்படுத்தப்பட்ட தமிழ்நாடு மக்களிடம்! என்று அதில் கூறியுள்ளார்.
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு எலக்ட்ரிகல் பஸ் சர்வீஸ் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பஸ் 4ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இயக்கப்படுகிறது. முதல் முறையாக அறிமுக இந்த பஸ் இன்று(அக்.18) கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை முடியும் சீரோபாயிண்ட் பகுதிக்கு வந்தடைந்தது. இந்த பஸ்சை விஜய் வசந்த் எம்.பி தலைமையில் மாணவ மாணவிகள் வரவேற்றனர். இதில் கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் 19.10.2024 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் வைத்து நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் 2 ஏக்கர் பரப்பில் 3 ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக வரும் 22ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் தொழில் முனைவோர் மற்றும் ஜவுளி தொழில் செய்வோர் வலயம் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.
குமரி ஆவினில் தீபாவளியையொட்டி நெல்லை நெய் அல்வா பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. 15 டன் நெய், மைசூர் பாகு, 5 டன் பால்கோவா தயாரிக்கப்பட உள்ளது. நெய் அல்வா 3 டன் தயாரிக்கப்படும். மிக்சர், மில்க்சுவீட் விற்பனை செய்யப்படும். தீபாவளியையொட்டி ரூ.2.50 கோடிக்கு ஆவின் இனிப்பு பொருட்களை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குமரி ஆவின் பொது மேலாளர் அருணகிரி நாதன் கூறியுள்ளார்.
குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 1,296 இடங்களில் பாம்பு தொல்லை ஏற்பட்டுள்ளது. ஆறு, குளம் போன்றவற்றில் 41 பேர் இறந்துள்ளனர். 71 பேர் மீட்கப்பட்டுள்ளனர். புயல், மழை, வெள்ள காலங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ரப்பர் படகுகள், பரிசல்கள், லைப் ஜாக்கெட்டுகள் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் 167 தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டு வருவதாக தீயணைப்பு அதிகாரி சத்யகுமார் நேற்று(அக்.,17) தெரிவித்துள்ளார்.
குமரி நாடாளுமன்றஉறுப்பினர் விஜய் வசந்த் இன்று(அக்.,18) மாலை 3:30 மணிக்கு கருங்கல் தபால் நிலையத்திலிருந்து புறப்பட்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். நெடிய விளாகம், செல்லங்கோணம், வட்டவிளை, சரல்கோட்டை, கஞ்சி குழி, முருங்க விளை, பள்ளியாடி, இரவிபுதூர்கடை, வெள்ளிக்கோடு, கல்லுவிளை, காடு வெட்டி வழியாக சென்று அழகிய மண்டபத்தில் நிறைவு செய்கிறார்.
வேம்பத்தூர் காலனியை சேர்ந்தவர் எட்வின்ராஜ். இவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி கனகசபாபதி என்பவர் ரூ.6 லட்சம் வாங்கி கொண்டு வேலை வாங்கி கொடுக்காததால் பணத்தை கேட்ட போது இரண்டு காசோலைகளை கொடுத்துள்ளார். அந்த காசோலையில் வங்கியில் பணம் இல்லாததால் பணத்தை எட்வின்ராஜ் திருப்பி கேட்டபோது அவரையும் ஜெகன் என்பவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோட்டாறு போலீசார் நேற்று வழக்கு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.