Kanyakumari

News October 21, 2024

குமரி மாவட்ட மழை நிலவரம் வெளியீடு

image

குமரியில் இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.இதில், மேல கோதையாறு பகுதியில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கீழக்கோதையாறு- 17, கல்லார் -14, தடிக்காரன் கோணம்- 12, பூதப்பாண்டி- 8.2, முக்கடல் அணை- 7.2, ஆரல்வாய்மொழி தும்பகோடு -4.4, பாலமோர் மலை அடிவாரம் -4.2, புத்தன் அணை- 4, பெருச்சாணி -3.8, புசுருளோடு -3.4, செண்பகராமன் புதூர் -2.8 மிமீ மழை பெய்துள்ளது

News October 21, 2024

குமரி ஆட்சியர் தலைமையில் மகப்பேறு ஆலோசனை கூட்டம்

image

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவமனைகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில்,மகப்பேறு மருத்துவமனைகளில் பிறப்பு-இறப்பு விகிதம் குறித்து ஆட்சியர் பல்வேறு கேள்விகளை கேட்டு தெரிந்து கொண்டார்.

News October 21, 2024

மதுரை – புனலூர் ரயில் சேவையில் மாற்றம்

image

மதுரையிலிருந்து இம்மாதம் 24ஆம் தேதி புறப்படும் மதுரை – புனலூர் விரைவு ரயில் மதுரை – நெல்லை இடையே மட்டுமே இயங்கும். திருநெல்வேலி – புனலூர் இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று புனலூர் – மதுரை ரயில் புனலூர் – நெல்லை இடையே ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 25 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு ரயில் மதுரை புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 21, 2024

திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்க ரோந்து: குமரி SP

image

குமரி மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள், சப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மாலை நேரங்களில் தொடர்ந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

News October 21, 2024

மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய எம்பி, எம்எல்ஏ

image

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட மாணவர் காங்., சார்பில் தடகள, குழு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை இலக்கிய போட்டிகள் நேற்று நடைபெற்றன. இந்த போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் விஜய் வசந்த் எம்பி, ராஜேஷ்குமார் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

News October 21, 2024

குமரியில் தொடர்கதை! ரயிலில் கஞ்சா கடத்துபவர்கள் யார்?

image

குமரிக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவது தொடர் கதையாகியுள்ளது. கஞ்சா கடத்துவதை தடுக்க ரயில்வே போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் தொடர்ந்து கடத்தி வரப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பும் 4 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டு அனாதையாக கிடந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குமரி பகுதி மக்களிடையே அதிர்ச்சி மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

News October 21, 2024

உதயநிதியிடம் வாழ்த்து பெற்ற குமரி திமுக பிரமுகர்

image

சேலத்தில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணைய அமைப்பாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில், இளைஞரணி குமரி மாவட்ட துணை அமைப்பாளரும், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருமான வழக்கறிஞர் சரவணன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News October 21, 2024

முதியோர் உதவித்தொகை பெற வந்த 110 வயது மூதாட்டி

image

நாகர்கோவிலை சேர்ந்த சரஸ்வதி என்ற 110 வயதுடைய மூதாட்டியை அவரது மகன் நேற்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். தனது தாய்க்கு முதியோர் உதவித்தொகை இதுவரை கிடைக்கவில்லை என்பதால், அவர் இறக்கும் முன்பாவது கிடைக்க வேண்டும் என்பதற்காக மூன்று சக்கர நாற்காலியில் அழைத்து வந்ததாக தெரிவித்தார். ஆனால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விடுமுறை என்பதால் திரும்பிச் சென்றார்.

News October 20, 2024

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேர் கைது

image

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் உத்தரவின் பேரில் கஞ்சா, குட்கா, அனுமதியின்றி மது விற்பனையை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொல்லங்கோடு, மார்த்தாண்டம், திருவட்டார், ஆரல்வாய்மொழி என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் குட்கா மற்றும் மது விற்பனை செய்த 1 பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.

News October 20, 2024

உளவுத்துறை கண்காணிப்பதாக உதயகுமார் புகார்

image

அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“ அழிக்கால் – பிள்ளைத்தோப்பு கடற்கரை கிராமத்தில் அண்மையில் கடல்நீர் உட்புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது; நான் அங்கு நண்பர்களுடன் சென்று தலைவர்களையும், மக்களையும் சந்தித்துப் பேசினேன்; அப்பாது, என்னை உளவுத்துறை போலீசார் செல்லும் இடங்களுக்கு எல்லாம் வந்து கண்காணித்தனர்” என குற்றச்சாட்டியுள்ளார்

error: Content is protected !!