India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவிலில் இருந்து இம்மாதம் 24 மற்றும் 27ஆம் தேதிகளில் காலை 6.15 மணிக்கு புறப்படும் மும்பை விரைவு ரயில், விருதுநகர் – மானாமதுரை – காரைக்குடி – திருச்சி தடத்தில் செல்லும். இந்நிலையில், இந்த ரயில் கூடுதலாக மானாமதுரையில் நின்று செல்லும். மேலும், மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது என திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே இன்று தெரிவித்துள்ளது.
குமரி மாவட்டம் மயிலாடியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் மாணவி உமையாள்(6) இன்று பள்ளியிலிருந்து அவரது தாயாருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். மயிலாடியில் வந்து கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற டாரஸ் லாரி திடீரென பின்னால் வந்ததில், இருசக்கர வாகனம் மீது மோதி சிறுமி உமையாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, அஞ்சு கிராமம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரியில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணை பகுதியில் 16.6 மி.மீ மற்றும் மழை பெய்துள்ளது. சிற்றாறு 1 பகுதியில் 15.4 மி.மீ, சுருளோட்டில் 14 மி.மீ, பெருஞ்சாணி பகுதியில் 11.5 மி.மீ, மாம்பழத்துறை ஆறு பகுதியில் 7 மி.மீ, சிற்றாறு 2 பகுதியில் 4 மி.மீ, திற்பரப்பில் 3.4 மி.மீ, கல்லாரில் 3 மி.மீ, திருவரம்பில் 2.4 மி.மீ, திருவட்டாரில் 2 மி.மீ மழை பெய்துள்ளது.
குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று அறிவித்தார். அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்க கூடாது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
குமரி மாவட்டத்தை பிரசவ மரணம் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று(அக்.,21) அறிவுறுத்தினார். மகப்பேறு சிகிச்சைக்காக 24 மணி நேரமும் அரசு மருத்துவமனைகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், தனியார் மருத்துவமனைகள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
குமரி மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளி மற்றும் ஒலி மாசு இல்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்பி. சுந்தரவதனம் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒலி மாசு மற்றும் விபத்தில் தீபாவளி கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி அருகே சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் வன்புணர்வு செய்த காதலன் மற்றும் சிறுமியிடம் அத்துமீறிய பக்கத்து வீட்டுக்காரர் ஆகிய இரண்டு பேரை குமரி அனைத்து மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காதலன் ஆல்வின், தகாத முறையில் நடக்க முயன்ற ரகுநாதன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
குமரி மாவட்டத்தில் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் அனைத்தும், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு சட்டம் 2007-ன் கீழ் கண்டிப்பாக 10 நாளுக்குள் பதிவு செய்ய வேண்டும். அனுமதியின்றி நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மூடப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று(அக்.,21) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதியில் 16 முதல் 18 நொடிகள் இடைவெளியில் 1.2 மீட்டர் முதல் 1.4 மீட்டர் உயரத்துக்கு பேரலைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று(அக்.,22) இந்த நிலை நீடிக்கும் என இந்திய கடல் தகவல் சேவை மையம் நேற்று அறிவித்துள்ளது. எனவே கடலுக்கு செல்லும் மீனவர்கள், கடலோர பகுதிகளில் வசிக்கிறவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE IT.
கனிம வளங்களை கொண்டு செல்ல போலி அரசு முத்திரை, அனுமதி சீட்டு அச்சடித்த பிறஸ் உரிமையாளர், பணியாளர் மற்றும் லாரி ஓட்டுநர்கள் நான்கு பேரை நேற்று தக்கலையில் வைத்து தனிப்படை உதவி ஆய்வாளர்கள் மகேஷ்வரராஜ் மற்றும் ஆறுமுகம் குழுவினர் கைது செய்தனர். மேலும் 2 கனரக வாகனங்கள் ஒரு சொகுசு கார் 2000 போலி அனுமதி சீட்டு, முத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.. மோசடியில் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.