Kanyakumari

News October 23, 2024

போலி பாஸ் சீல் தயாரித்த அச்சக உரிமையாளர் கைது

image

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்வதற்கு போலியாக பாஸ் மற்றும் சீல் தயாரித்து மோசடி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மார்த்தாண்டத்தில் அச்சகம் நடத்தி வரும் வேதராஜ் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கேரளாவிற்கு கனிம வளம் கொண்டு செல்ல லாரிகளுக்கு போலி பாஸ் மற்றும் சீல் தயாரித்து கொடுத்தது தெரிய வந்துள்ளது.

News October 23, 2024

குமரி: கண்ணாடி பாலத்திற்கு தூண்கள் பொருத்தும் பணி

image

குமரி கடலில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த தூண்கள் நிறுவுவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

News October 23, 2024

சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்கவும்: குமரி கலெக்டர்

image

குமரி கலெக்டர் அழகு மீனா நேற்று(அக்.,22) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை & எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். SHARE IT.

News October 23, 2024

குமரியின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் ஆட்சியரகம் முன்பு இன்று(அக்.23) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வழிபாட்டுத் தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி அமைத்துள்ளது தொடர்பாக சிபிஐஎம்எல் செங்கொடி சார்பில் கருங்கல் ஆட்டோ நிலையம் அருகே மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. குமரியில் தங்கியுள்ள திரிபுரா உயர் நீதிமன்ற நீதிபதி லோத் மதியம் 12 மணிக்கு கேரளா செல்கிறார்.

News October 23, 2024

நாகர்கோவிலில் இன்று திமுக நிர்வாகிகள் கூட்டம்

image

குமரி மாவட்ட திமுக மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி நிர்வாகிகள் மற்றும் பேரூர் வட்ட செயலாளர் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது. கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என நாகர்கோவில் மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

News October 23, 2024

ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – ஆட்சியர் தகவல்

image

குமரி மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவம்பர் 15 காலை 10.30 மணிக்கு ஓய்வூதிய இயக்குநர் முன்னிலையில் ஆட்சித்தலைவர் அலுவலக 3வது தளத்தில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின், ஓய்வூதியம் தொடர்பாக தீர்வு செய்யப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பிரச்சனைகள் குறித்து தீர்வு எட்டப்படும் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News October 23, 2024

குமரி அஞ்சலகங்களில் பயிர் காப்பீடு வசதி அறிமுகம்

image

பயிர் காப்பீடு வசதி தற்போது அனைத்து அஞ்சலகங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், “பிரிமியம் தொகை மட்டுமே செலுத்த வேண்டும்; வேறு கூடுதல் சேவை கட்டணம் கிடையாது; உளுந்து, பாசி, பயறு, மக்காச்சோளம், வெங்காயம், வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களில் பயிர் காப்பீடு செய்ய அணுகலாம்” என கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் இன்று தெரிவித்துள்ளார். SHARE IT

News October 22, 2024

சென்னை -குமரிக்கு மூன்று சிறப்பு ரயில்கள்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசல் தவிர்ப்பதற்காக தென்னக ரயில்வே சென்னை கன்னியாகுமரி இடையே 3 சிறப்புகளை இயக்க இருக்கிறது. 29ஆம் தேதி சென்னை சென்ட்ரல் – குமரி, 2 தாம்பரம் – கன்னியாகுமரி ஆகிய இரண்டு சிறப்பு ரயில்களும் 30ஆம் தேதி சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளன. இவை விருத்தாச்சலம், திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில் வழியாக  ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

News October 22, 2024

குமரி வாக்காளர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு

image

குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 29.10.2024 அன்று வெளியிடப்படவுள்ளது. இதையடுத்து, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆதார் எண் இணைத்தல் ஆகியவைகளை மேற்கொள்ள அக்.,29 முதல் நவ.,28 வரை விண்ணப்பங்கள் பெறப்படும். இதற்கான சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் 9.10, 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் அழகுமீனா இன்று கூறினார்.

News October 22, 2024

குமரியில் மீனவர் குறைதீர் நாள் கூட்டம் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வரும் 25.10.2024 அன்று முற்பகல் 10.30 மணிக்கு மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள் அன்று ஆட்சியரிடம் மனுவாக கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!