Kanyakumari

News October 24, 2024

குமரி ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

image

குமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஏசு.ராஜசேகரன் 30க்கும் மேற்பட்டவர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1.47 கோடி மோசடி செய்ததாக பெண் ஒருவர் இரண்டு தினங்களுக்கு முன் புகார் அளித்திருந்தார். சுந்தரவதனம் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் ஏசு.ராஜசேகரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டி.ஜ.ஜி உத்தரவு.

News October 24, 2024

போதைப்பொருள்கள் தடுக்க ஆட்சியர் நடவடிக்கை

image

குமரி மாவட்டத்தில் மாணவர்களுக்கு போதைப்பொருள்கள் கிடைப்பதை தடுக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஊராட்சிகளில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை முழுமையாக சென்றடையவில்லை. எனவே, ஊராட்சி பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று கூறினார்.

News October 24, 2024

பாதுகாப்பாக பட்டாசு வெடித்தல்: தீயணைப்புத்துறை விளக்கம்

image

தீபாவளி பண்டிகை குறித்து நாகர்கோவில் தீயணைப்பு துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், பட்டாசுகளை டப்பா அல்லது வேறு பொருட்களால் மூடி வெடிக்கக்கூடாது. தீக்காயம் ஏற்பட்டால் உடனே காயத்தில் குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். வீட்டின் மாடியில் பட்டாசு வெடிக்கக்கூடாது. சிறுவர்கள் கையில் பட்டாசுகளை எடுத்து விளையாட கூடாது. வெடிக்காத பட்டாசுகளை மீண்டும் வெடிக்க முயற்சி செய்யக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

News October 24, 2024

சொத்து தகராறில் தம்பி காருக்கு தீ வைத்த அண்ணன்

image

குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பெருமாள் நகரை சேர்ந்தவர் விவேக். இவர், தனக்கு சொந்தமான காரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இந்நிலையில், விவேக்கின் அண்ணன் விக்னேஷ், நேற்று(அக்.,23) இரவு காருக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். சொத்து தகராறில் காருக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News October 24, 2024

தஞ்சையிலிருந்து குமரி வந்த 1,350 டன் ரேசன் அரிசி

image

குமரி மாவட்ட பொது விநியோக திட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ரேசன் பொருட்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று(அக்.,23) காலை தஞ்சாவூரில் இருந்து 1,350 டன் ரேசன் அரிசி மூடைகள் ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. சரக்கு ரயிலில் 35 வேகன்களில் இந்த அரிசி வந்தது. பின்னர் லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

News October 24, 2024

தீபாவளி பரிசு: எச்சரிக்கையாக இருக்க SP அறிவுறுத்தல்

image

தீபாவளி பண்டிகையையொட்டி விளம்பரங்கள் மூலம் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாகவும், சமூக வலைத்தளங்கள் & தொலைபேசி வாயிலாக உங்களுக்கு பரிசுப் பொருட்கள் கிடைத்திருப்பதாகவும் கூறி யாரேனும் பணமோ, OTP கேட்டாலோ பகிர வேண்டாம். இதுபோன்ற மோசடிகள் குறித்து சைபர் கிரைம் <>‘இணையதள முகவரி’<<>> அல்லது HELP LINE எண் ‘1930’-க்கு புகார் தெரிவிக்கலாம் என குமரி எஸ்பி சுந்தரவதனம் அறிவுறுத்தியுள்ளார். SHARE IT.

News October 24, 2024

கொல்லங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை

image

கொல்லங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதுவரை கணக்கில் வராத 33200 ரூபாய் 33,200 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகளவு லஞ்சம் புரள்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில் சோதனை நடைபெற்றது.

News October 24, 2024

ஒரே நாளில் ரப்பர் விலை 300 ரூபாய் குறைவு

image

குமரி மாவட்டத்தில் முக்கிய பயிர்களில் ஒன்றாக ரப்பர் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் நபர் கேரளாவிற்கும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரப்பர் விலை தினசரி வீழ்ச்சியடைந்து வருகிறது நேற்று முன்தினம் 18,700 ரூபாயாக இருந்த 100 கிலோ ரப்பர், இன்று 300 ரூபாய் குறைந்து 18,400 ரூபாயாக உள்ளது. இதனால் ரப்பர் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News October 23, 2024

கொட்டாரத்தில் கைதுக்கு பயந்து தற்கொலை முயற்சி

image

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே மாமியார் கொடுமை குற்றச்சாட்டில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் கைதுக்கு பயந்து மாமியார் செண்பகவல்லி இன்று (அக்டோபர் 23) விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் செண்பகவல்லி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 23, 2024

குமரி மாவட்ட மழை நிலவரம் வெளியீடு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 37.2 மி.மீ. மழை பெய்துள்ளது. மேலும், மாம்பழத்துறை ஆறு-30 மி.மீ, ஆணைக்கிடங்கு-29.6 மி.மீ, தக்கலை-22.4 மி.மீ, குளச்சல்-18.2 மி.மீ, இரணியல்-14.4 மி.மீ, ஆரல்வாய்மொழி-12 மி.மீ, கோழிபோர் விளை-10.2 மி.மீ, நெய்யூர்-7.5 மி.மீ, பூதப்பாண்டி-6.2 மி.மீ, சிவலோகம் 2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

error: Content is protected !!