India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்தில் முக்கிய பயிர்களில் ஒன்றாக ரப்பர் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் நபர் கேரளாவிற்கும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரப்பர் விலை தினசரி வீழ்ச்சியடைந்து வருகிறது நேற்று முன்தினம் 18,700 ரூபாயாக இருந்த 100 கிலோ ரப்பர், இன்று 300 ரூபாய் குறைந்து 18,400 ரூபாயாக உள்ளது. இதனால் ரப்பர் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே மாமியார் கொடுமை குற்றச்சாட்டில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் கைதுக்கு பயந்து மாமியார் செண்பகவல்லி இன்று (அக்டோபர் 23) விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் செண்பகவல்லி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 37.2 மி.மீ. மழை பெய்துள்ளது. மேலும், மாம்பழத்துறை ஆறு-30 மி.மீ, ஆணைக்கிடங்கு-29.6 மி.மீ, தக்கலை-22.4 மி.மீ, குளச்சல்-18.2 மி.மீ, இரணியல்-14.4 மி.மீ, ஆரல்வாய்மொழி-12 மி.மீ, கோழிபோர் விளை-10.2 மி.மீ, நெய்யூர்-7.5 மி.மீ, பூதப்பாண்டி-6.2 மி.மீ, சிவலோகம் 2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
குமரி மாவட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதை போன்று மேற்கு கடற்கரைப் பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கோதையாறு, கல்லாறு, முத்துக்குளி வயல் போன்ற பகுதிகளிலும் மழை அவ்வப்போது பெய்கிறது.
குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கீரிப்பாறை மற்றும் காளிகேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் கீரிப்பாறை மற்றும் காளிகேசம் சுற்றுலா மையங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறை இன்று தடை விதித்துள்ளது. அங்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று வெளியிட்டுள்ள பதிவில், BSNL இன்டர்நெட் நத்தை வேகத்தில் பயணிக்கிறது. 2023-24 நிதியாண்டில் BSNL சந்தித்துள்ள நட்டம் ரூ.5,371 கோடி. BSNL மக்கள் பணத்தில் உருவாக்கிய பலகோடி மதிப்பிலான சொத்துகளை இப்போது விற்றுக்கொண்டிருக்கின்றனர். நிலைமை இப்படியிருக்க பெயர் மாற்றுவதும், நிறம் மாற்றுவதும் வேடிக்கையாக உள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது 31.10.2024 வரை சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் https://skilltraining.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 94435 79558 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்றூர் கல்லுப்பாலத்தில் உள்ள குமரி மாவட்ட வாள் விளையாட்டுக் கழக பயிற்சி அரங்கத்தில் மாநில அளவிலான வாள் விளையாட்டுப்போட்டிக்கு வீரர்கள் தேர்வு வரும் 26, 27 ஆகிய தேதிகளில் நடக்கிறது. விருப்பமுள்ளோர் உரிய ஆவணங்களுடன் விளையாட்டுக் கழக செயலாளரிடம் சமர்பிக்க வேண்டும். 94884 77117 என கைபேசியில் கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம் என நிர்வாகிகள் கூறினர். SHARE IT.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்வதற்கு போலியாக பாஸ் மற்றும் சீல் தயாரித்து மோசடி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மார்த்தாண்டத்தில் அச்சகம் நடத்தி வரும் வேதராஜ் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கேரளாவிற்கு கனிம வளம் கொண்டு செல்ல லாரிகளுக்கு போலி பாஸ் மற்றும் சீல் தயாரித்து கொடுத்தது தெரிய வந்துள்ளது.
குமரி கடலில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த தூண்கள் நிறுவுவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.